உன்னை விரைவில் சந்திக்கிறேன் – விபத்தில் இறந்த தன் தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் யாஷிகா கதரல்

0
904
yashika
- Advertisement -

சமீபத்தில் கோர விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்து வரும் யாஷிகா விபத்திற்கு பின் தன் படம் குறித்து முதன் முறையாக பதிவிட்டுள்ளார். கடந்த வாரங்களுக்கு முன் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். விபத்துக்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை நீக்கியுள்ளார்.

-விளம்பரம்-
yashika

மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் வாழ்க்கை முழுதும் தன் தோழியை கொன்ற குற்ற உணர்வுடன் தான் இருப்பேன் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தன் தோழியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் யாஷிகா.

இதையும் பாருங்க : எம் குமரன் S/O மகாலக்ஷ்மி படத்தில் நடித்தும் வெளியில் தெரியாததற்கு காரணம் இதான் – Vjs சொன்ன சுவாரசிய தகவல்.

- Advertisement -

அதில், என்னுடைய மிகப்பெரிய நலன் விரும்பி உடன்பிறவா சகோதரி என்றும் நான் உன்னை மிஸ் செய்தேன் உன்னை நினைக்காமல் ஒரு நாளும் சுலபமாக செல்வது இல்லை நான். பின்னோக்கி சென்று அனைத்தையும் சரி செய்ய ஆசைப்படுகிறேன். நீ எனக்கு கொடுத்த பல்வேறு அழகான நினைவுகளுக்கு நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய தேவதை எங்களை மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

நீ ஒரு மாணிக்கம் நான்தான் உன்னை நொறுக்கி விட்டேன். நீ இல்லை என்பதை என் மனது ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் இருவரும் சேர்ந்து சாப்பிட்டது மேக்கப் போட்டது அனைத்தையும் என்னால் மறக்க முடியவில்லை. உனக்கு நிச்சயம் ஒரு நல்ல இடம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். விரைவில் உன்னை சந்திக்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement