இது தான் நான் உன்னை எடுத்த கடைசி புகைப்படம் – தன் தோழியின் புகைப்படத்தை பதிவிட்ட யாசிகா.

0
930
yashika
- Advertisement -

சமீபத்தில் கோர விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்து வரும் யாஷிகா விபத்திற்கு பின் தன் படம் குறித்து முதன் முறையாக பதிவிட்டுள்ளார். கடந்த வாரங்களுக்கு முன் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். விபத்துக்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தைகூட நீக்கி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் வாழ்க்கை முழுதும் தன் தோழியை கொன்ற குற்ற உணர்வுடன் தான் இருப்பேன் என்றும் கூறி இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தன் தோழியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் யாஷிகா.என்னுடைய மிகப்பெரிய நலன் விரும்பி உடன்பிறவா சகோதரி என்றும் நான் உன்னை மிஸ் செய்தேன் உன்னை நினைக்காமல் ஒரு நாளும் சுலபமாக செல்வது இல்லை நான்.நீ ஒரு மாணிக்கம் நான்தான் உன்னை நொறுக்கி விட்டேன். நீ இல்லை என்பதை என் மனது ஏற்றுக் கொள்ளவில்லை.

விரைவில் உன்னை சந்திக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் தன் தோழியை எடுத்து கடைசி புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள யாஷிகா, உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். என்னை மன்னித்து விடு. நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது. தயவு செய்து மீண்டும் வந்துவிடு என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement