மஹத் பேசுனா பேசுவேன்..பேசலனா பேச மாட்டேன்.! ஆனா..இவருடன் மட்டும் பேசவே மாட்டேன்.!

0
1074
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்னும் 5 போட்டியாரல்களே மீதம் உள்ளனர். ஜனனி இறுதி சுற்றிற்கு நேரடியாக தகுதி பெற்ற நிலையில் ரித்விகா, பாலாஜி, ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி, யாஷிகா ஆகியயோர் இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்ட்டிருந்தனர்.

-விளம்பரம்-

yashika-bigg-boss

- Advertisement -

இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் என்பதால் கடந்த வாரம் யாஷிகா மற்றும் பாலாஜி வெளியேற்றபட்டனர். இதில் யாஷிகா வெளியேறியது தான் பலரும் ஏற்கமுடியாத ஒன்றாக இருந்து வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை யாஷிகா ஐஸ்வரியிடம் தான் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அதே போல மஹத்திடம் காதலில் விழந்து விடயமும் நம் அனைவருக்கும் தெரியும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக மேடையில் யாஷிகா பேசியது அனைவரையும் கவர்ந்தது. யாஷிகாவின் முதிர்ச்சியை கண்டு கமல் கூட அவரை பாராட்டினார். இந்நிலையில் பிக் பாஸ் செட்டில் இருந்து வெளியேறிய யாஷிகா முதல் முறையாக பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் நீங்கள் யாரை மிகவும் மிஸ் செய்வீர்கள் என்றதற்கு கண்டிப்பாக நான் ஐஸ்வர்யாவை தான் மிஸ் செய்வேன், அதே போல மும்தாஜும், அவர் எனக்கு ஒரு அம்மா போல இருந்து வந்தார் என்று கூறியுள்ளார். மேலும், வெளியே சென்றதும் யாருடன் தொடர்பில் இருப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.

-விளம்பரம்-

yashika

அதற்கு பதில் கூறிய யாஷிகா, மும்தாஜ் மேடம் கிட்ட தொடர்பில் இருப்பேன், மஹத் என்னிடம் பேசுவது சந்தேகம் தான், மஹத் என்னிடம் பேசினால் நான் பேசுவேன். ஷாரிக்கிடம் தொடர்பில் இருப்பேன் என்று கூறியுள்ள யாஷிகா டேனி கூட கண்டிப்பா டச்ல இருக்க மாட்டேன் என்று முகம் சுழித்தபடி கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே டேனி, ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிடம் தான் மிகவும் நட்பாக இருந்து வந்தார். ஆனால், மஹத் வெளியேறிய பின்னர் யாஷிகாவிடமும் ஐஸ்வர்யாவிடமும் நெருக்கத்தை குறித்துக்கொண்டு பாலாஜி மற்றும் ஜனனி பக்கம் சென்றுவிட்டார் டேனி. டேனி சுயநலத்திற்காக இறுதியில் யாஷிகாவிடம் இருந்து விலகி இருந்தார் என்பது ரசிகர்களுக்கே நன்றாக விளங்கியது. அதனால் தான் டேனியிடம் கண்டிப்பாக நான் தொடர்பில் இருக்க மாட்டேன் என்று யாஷிகா கூறியுள்ளார்.

Advertisement