கண்ட்ரோல் பண்ண முடியாது..! அந்த ஆசை பலபேருடன் அது வரும்.! யாஷிகா மோசமான பேச்சு

0
344
Yashika

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் யாஷிகா மீது வைத்திருந்த கண்மூடி தனமான காதல் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மஹத் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்தும் யாஷிகா, மஹத்தை காதலித்து அனைவர் மத்தியிலும் யாஷிகா மீது ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது.

mumtaj

யாஷிகா மற்றும் மஹத்திற்கு இடையான காதல் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை முன்வைத்து வந்தனர். மஹத்தை பற்றி பலரும் தப்பாக பேசிய போது அவரது காதலி பிராச்சி, மஹத்திற்கு பக்கபலமாக இருந்து வந்தார். ஆனால், யாஷிகாவை, மஹத் காதலிக்கிறார் என்ற விடயத்தை தெரிந்ததும் மஹத்துடனான காதலை தான் முறித்துக்கொண்டு விட்டதாக பிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மஹத், தற்போது பிராச்சியுடன் சேர்ந்து விட்டார். மஹத், யாஷிகா மீது வைத்த காதல் தவறு தான் அது எதிர்பாராத விதமாக நடந்த ஒன்று என்று மஹத்தும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், யாஷிகாவிற்கு, மஹத் மீது வந்த காதால் தவறு என்று இன்னும் உணராமல் தான் இருக்கிறார்.

Aishwarya

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, யாஷிகா, மும்தாஜ் ஆகியோர் பேசி கொண்டிருக்கையில் மும்தாஜ் தனது தோழி ஒருவரின் காதல் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது எனக்கு சனா என்று ஒரு பிரண்ட் இருக்கிறார் அவளுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் கழித்து மற்றொருவருடன் காதல் வந்தது , என்ன முடிவெடுப்பது என தெரியாமல் அவர் என்னிடம் யோசனை கேட்டார் என்று கூறுகையில் உடனே யாஷிகா காதல் என்பது கட்டுப்படுத்த முடியாது ஒன்று, அது ஒருவரிடமோ பலரிடமோ வரலாம் என்று கூறுகிறார்.

இதனை கண்ட போது யாஷிகா ஏன் இப்படி பேசுகிறார் என்ற எண்ணமே தோன்றியது. யாஷிகாவிற்கு ஏற்கனவே ஒரு காதலர் இருக்கிறார் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் யாஷிகாவின் நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். அப்படி இருக்க அவருக்கு மஹத் மீது காதல் வந்ததே தவறு தான்.ஆனால், காதல் என்பது பலரிடமும் வரும் என்று யாஷிகா கூறியுள்ளது அவரது குணத்தை பற்றி நன்றாகவே நமக்கு உணர்த்துகிறது.