வளைகாப்பில் மும்தாஜ் கொடுத்த அசத்தல் பரிசு..! நெகிழ்ந்த சென்ராயன் மனைவி.! புகைப்படம் இதோ.!

0
1450
Kayalvizhi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து வருகின்றனர். ஏற்கனவே மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா, ஜனனி குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சென்றுவிட்டனர்.

-விளம்பரம்-

sendrayan

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்ராயனின் மனைவி வந்திருந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு முக்கிய காரணம் திருமனாகி 4 வருடங்களுக்கு பின்னரும் குழந்தை இல்லாமல் வருந்தி வந்த சென்ராயனின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை கேட்டதும் குழந்தை போல துள்ளி குதித்து அழுதார் சென்ராயன். இந்த விடயம் போட்டியாளர்களுக்கு சந்தோஷமான செய்தியாக அமைந்திட பிக் பாஸ் வீட்டிலேயே ஒரு சின்ன வளைகாப்பையே நடத்திவிட்டனர்.

வளைகாப்பு நடக்கும் பெண்ணிற்கு வழக்கமாக சொந்தங்கள் தான் நகை அணிவித்து தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் கயல்விழிக்கு அனைவரும் சந்தானம் பூசி வாழ்த்திய போது மும்தாஜ் தன்னிடம் வைத்திருந்த வளையலை கயல்விழிக்கு அணிவித்தார். அதுவும் தங்க வலையளை அணிவித்து கயல்விழியை ஆசிர்வதித்தார். இதிலிருந்து மும்தாஜின் நல்ல குணம் அனைவருக்குமே தெரியவந்தது.

-விளம்பரம்-

bigg-boss-mumtaz

bigg-boss-mumtaz

sendrayan

ஏற்கனவே மும்தாஜ், சென்ராயனுக்கு ஒரு சட்டை வாங்கி தருவதாக கூறி இருந்தார். ஆனால், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அவரவர் வீட்டில் இருந்து பரிசுகள் வந்த போது. மும்தாஜ் வீட்டில் இருந்து சென்ராயனுக்கு சட்டையை பரிசாக அனுப்பி வைத்திருந்தனர். மும்தாஜ் டிவியில் கூறியதை கேட்டு அவரது குடும்பத்தினர் சென்ராயனுக்கு பரிசை அனுப்பி வைத்தனர். தற்போது மும்தாஜ் , சென்ராயனின் மனைவி கயல்விழிக்கு தங்க வளையலை அளித்திருப்பது மும்தாஜிடம் இருக்கும் நல்ல குணத்தையே காட்டுகிறது.

Advertisement