வனிதா தாக்கபட்ட விவகாரம், பிரதீப்பிற்கு ஆதரவாக சனம் போட்ட பதிவு – என்ன தெரியுமா?

0
521
- Advertisement -

பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருக்கும் வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் எதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

- Advertisement -

வனிதா குறித்த தகவல்:

தற்போது வனிதா அவர்கள் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து வீடியோ பதிவிட்டு வருகிறார். இதில் வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா கலந்து கொண்டிருக்கிறார். இதனால் அவரை குறித்த விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தும் ஜோதிகாவிற்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அதோடு பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றியது குறித்து வனிதா மோசமாக விமர்சித்து பேசி இருந்தார். இதனால் வனிதா மீது பலருமே கண்டனம் தெரிவித்து குற்றம் சாட்டி இருந்தார்கள்.

வனிதா மீது தாக்குதல்:

இப்படி இருக்கும் நிலையில் மர்ம நபர்கள் வனிதாவை தாக்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக வனிதா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது பார்ப்பதற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு காரணம் பிரதீப் ஆண்டனியின் ரசிகர்கள் தான் என்று வனிதா கூறி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் பிக் பாஸ் பிரபலம் சனம் செட்டி டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இந்தக் கோழைத்தனம் ஆன கொடூர தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

-விளம்பரம்-

சனம் ஷெட்டி பதிவு:

இது போன்ற பல பிரச்சினைகளை நானும் சந்தித்து இருக்கிறேன். இன்னும் சந்தித்துக் கொண்டும் வருகிறேன். இந்த தாக்குதலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுங்கள். நிச்சயமாக இதற்கு காரணமானவன் தண்டிக்கப்பட வேண்டும். யாரோ ஒரு கொடூரமானவன் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த பிரதீப் ரசிகர்கள் மீது பழி போடக்கூடாது என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த வனிதா, நான் என் மீதான தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன்.

வனிதா பதில்:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு கேம் ஷோ மட்டுமே. இதற்கு நான் ஏன் இந்த தாக்குதலை அனுபவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், ஏதோ ஒரு பிரச்சனையில் முகத்தில் குத்துவாகிக்கொண்டு அந்த பழியை பிரதீப் ஆண்டினி மீது போடுகிறீர்கள். இது நியாயமா? என்றெல்லாம் கொந்தளித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். உண்மையிலேயே வனிதாவிற்கு நடந்த இந்த அவல நிலைமைக்கு காரணமானவர்கள் யார்? என்று தான் தெரியவில்லை.

Advertisement