வாயில இருந்து ரத்தம் வந்ததும் – மகளின் இறப்பு குறித்து பேசிய எஸ்.ஏ.சி

0
484
- Advertisement -

தன் மகளின் இழப்பு குறித்து எஸ்ஏ சந்திரசேகர் முதன் முதலாக மனம் திறந்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த படம் லியோ. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய வெற்றி விழா நடைபெற்றது. தற்போது இந்த படம் ஒடிடியில் வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சினேகா, பிரபு தேவா, பிரசாந்த் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

- Advertisement -

தளபதி 68:

தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படி விஜய், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான். எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் இயக்கத்தில் வந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. தற்போது இவர் படங்களை இயக்குவதை விட்டு நடித்துக் கொண்டு வருகிறார்.

ஏ. சந்திரசேகர்அளித்த பேட்டி:

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவரிடம் உங்கள் வாழ்க்கையில் மிஸ் செய்யும் ஒரு நபரை குறித்து கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வித்யா அவர்களின் இறப்பு :

அதற்கு அவர், என்னுடைய மகள் வித்யாவை தான் நான் ரொம்ப மிஸ் செய்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் இழந்த மிகப்பெரிய இழப்பு அவள். விஜய்யை டேய் அண்ணா என்று தான் அழைப்பார். ஒருநாள் பேசிக் கொண்டே இருக்கும் போது போயிட்டு வரேன் என்று சொல்லி அவளை தூக்கினேன். அப்போது அவள் வாயில் இருந்து ரத்தம் வந்தது. அப்படியே நான் தூக்கிக் கொண்டு கோயில், குளம், மருத்துவமனை என்று எல்லாம் அலைந்தேன். அந்த சமயத்தில் மருத்துவர்கள் எல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

மகளின் இறப்பு குறித்து ஏ.சந்திரசேகர் கூறியது:

வித்யாவை என்னுடைய மடியில் தான் வைத்திருந்தேன். அவள் கண்ணை மூடியதும் விஜய், வித்யா என்று சத்தம் போட்டு கத்தினார். இன்னும் அது என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்போது விஜய்க்கு பத்து வயது தான். இருவருக்கும் இடையே ஆறு வயது தான் வித்தியாசம். வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அவன் தங்கையே இழந்தது, அவனால் தாங்க முடியவில்லை. அவள் இழப்பு எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரிய பேரிழப்பு என்று சொல்லலாம். வித்யா இறந்து 38 ஆண்டுகள் கடந்து இருக்கிறது. அவர் இழப்பு இன்றும் எங்கள் குடும்பத்தில் அது ஒரு ஆறாத வடுவாகவே இருக்கிறது என்று கண் கலங்கி கூறியிருக்கிறார்

Advertisement