உன்னை நம்பமாட்டேன்.! அபி மீது பாய்ந்த வனிதா.! லீக்கான இன்றைய கிளிப்பிங்.!

0
4756
abhirami
- Advertisement -

நேற்றைய புக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வாரம் யாரை வெளியேற்ற விரும்புகிறார்கள் என்பதை வாக்களித்து தெரிவித்தனர். அப்போது ஷெரின், சாக்க்ஷி,கவின் ஆகிய அனைவரும் மதுமிதா தான் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர்.

-விளம்பரம்-

அதன் பின்னர் அபிராமியும் மீரா தான் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறியதும், நீ சரியாக தான் செய்கிறாயா, குழப்பத்தில் எதுவும் இல்லையா என்று வனிதா, அபிராமியிடம் கூற, அதற்கு நான் சரியாக தான் செய்கிறேன் என்று அபிராமி கூறி விடுகிறார். 

- Advertisement -

அதன் பின்னர் அபிராமியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வனிதா ‘எதற்காக நீ மீராவை தேந்தெடுத்தாய்’ என்றதும் ‘அனைவருக்கும் அவர்கள் தனிப்பட்ட கருத்து இருக்காதா ‘ என்றார் அபிராமி. இன்றைய நிகழ்ச்சியிலும் இதே விஷயம் தொடர்கிறது.

அதில் அபிராமியிடம் வாக்கு வாதம் செய்யும் வனிதா இனி நான் உன்னை நம்பவே மாட்டேன் என்று கூறி சண்டையிடுகிறார். அதற்கு அபிராமியே நான் என்ன பண்ணேன் என்று கேட்கிறார். அதன் பின்னர் அபிராமி பாத்ரூம் சென்று கேமரா முன் அழுது கொண்டே என்னை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று கூறுகிறார்.

-விளம்பரம்-
Advertisement