பிக் பாஸ் ஜூலி ஹீரோயினாக நடிக்க உள்ளார், ஹீரோ யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே

0
6364
julie

பிக் பாஸ் ஜூலியை பற்றி புதிதாக தெரிந்து கொள்ள எதுவும் இல்லை. ஆனால் தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த ஜுலியை மக்கள் கடுமையாக விமர்சித்தாலும், அவர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் கிடைத்த பிரபலத்தை வைத்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பணம் சம்பாதித்தார். அதன் பின்னர் கலைஞர் டீவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சிக்கு தொகுப்பளினியாக பணியாற்றி வந்தார்.

பின்னர் விமல் நடிக்கும் மன்னன் வகையறா படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். இந்த படத்தின் ஒரு போட்டோ சமீபத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் தற்போது முதன் முதலாக ஹீரோயினாக அறிவுகமாக உள்ளார் ஜுலி.

K7 தயாரிப்பு நிறுவனம் அடுத்தாக தயாரிக்க உள்ள படத்தில் ஜூலியை ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பப்ளிக் ஸ்டார் சுதாகர் ஜூலிக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கு முன்னர் ‘தப்பாட்டம்’, ‘ஜூலியும் 4 பேரும்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பப்ளிக் ஸ்டார் சுதாகர்.

julie

இது குறித்து ஜூலி கூறியதாவது,

முதன் முதலாக ஹீரோயினாக நடிக்க உள்ளேன். இந்த கதையை கேட்டதும் பிடித்து விட்டது. அதனால் ஒப்புக் கொண்டேன். இந்தப்படம் எனக்கு ஒரு திருப்பு முனையாக அமையும். எனக் கூறினார்.

படத்திற்கான ஹீரோ, இயக்குனர் மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்