இதுநாள் வரை ஏற்பட்ட பிரச்சனைக்கு இவர் தான் காரணம், தெரியாம உங்கள திட்டிட்டேன் என்ன மன்னிச்சிருக்க. அந்தர் பல்டி அடித்த மீரா.

0
2124
meera
- Advertisement -

சமூக வலைதளத்தில் கடந்த மாதங்களாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில்தான் பிக்பாஸில் கலந்து கொண்டார் மீராமிதுன். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று இவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும்இவர் டுவிட்டரில் அடிக்கடி சரியான விஷயங்களை பதிவிட்டு வந்தார். அதிலும் கடந்த சில வாரமாக ஹோலிவுட்டு மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா.

இதையும் பாருங்க : இது கிறிஸ்துவத்திற்கு எதிரானது – மியா கலீபாவின் கருத்து ஆதரவு தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய பார்வதி.

- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த மீராமிதுன், சினிமா துறையில் இருக்கும் பல்வேறு நடிகைகளும் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாகவும் இதனால் தன்னுடைய முகத்தை பார்க்க எனக்கே பிடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். அதே போல தன்னை வளரவிடாமல் பலரும் சதி செய்வதாக கூறிய மீராமிதுன் தனக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்பது போல இருக்கிறது என்றும் கூறியிருந்தார். ஆனால், அதன் பின்னரும் அடங்காத இவர் தொடர்ந்து மற்றவர்களை குறை சொல்லி வீடியோ விடுவதை வழக்கமாக வைத்து வந்தார்.

இப்படி ஒரு நிலையில் இது நாள் வரை தனக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு எல்லாம் காரணம் திருநங்கையான அப்சரா ரெட்டி என்பவர் தான் என்று புதிய சர்ச்சை ஒன்று கிளப்பியிருக்கிறார் மீராமிதுன். மேலும், இதுநாள் வரை தன்னுடைய வளர்ச்சியை தடுக்க கூட இருந்து கொண்டு அப்சரா ரெட்டி தான் இத்தனை வேலைகளையும் செய்து வந்தார் என்றும் சமீபத்தில் தன்னை கொலை செய்ய ஆட்களை கூட அனுப்பினார் என்றும் கூறிய மீரா மிதுன், இதற்கான காரணம் இதனால் வரை தெரியாமல் விஜய் மற்றும் சூர்யா அவை தேவையில்லாமல் திட்டி விட்டதாகவும் இதனால் அவர்களிடம் மனமார்ந்த மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருக்கிறார் மீரா மிதுன்.

-விளம்பரம்-
Advertisement