இது கிறிஸ்துவத்திற்கு எதிரானது – மியா கலீபாவின் கருத்து ஆதரவு தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய பார்வதி.

0
1666
parvathy
- Advertisement -

தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். அதே போல இவரை பலரும் பிரபல ஆபாச பட நடிகை மியா கலீபாவுடன் ஒப்பிட்டு வருவதும் வாடிக்கையான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. சமீபத்தில் கூட பார்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

-விளம்பரம்-

அப்போது ரசிகர் ஒருவர், உங்களுடைய வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்தால் நீங்கள் பிரபல ஆபாச நடிகை மியா கலிபா மாதிரி உள்ளீர்கள என்று கூறி இருந்தார். அதற்கு விஜே பார்வதி எந்த பக்கத்தில் பார்த்தாலும் நான் ஒன்னும் அப்படி தெரியவில்லையே. இந்த கண்ணாடி போட்டு இருக்கறதுக்காக நீங்க சொல்லுவீங்க. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று செம கூலாக பதில் அளித்து இருந்தார்.

இதையும் பாருங்க : மீண்டும் கதிர் – முல்லைக்கு இடையே முத்த காட்சி – இந்த முறை முல்லை கொடுத்திருக்காங்க. (சித்ராக்கு பிரச்சனை வந்ததே இதனால தான்)

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மியா கலீபா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓரின சேர்க்கையாளராக தனது ஆசையை கூறியதற்கு அது நிராகரிக்கப்பட்டது பற்றி ட்வீட் போட்டு இருந்தார். மியா கலீபாவின் இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பார்வதி, ஓரின சேர்க்கை என்பது சாதாரண ஒரு விஷயம் தான். இது பற்றி சாதாரண மக்கள் பேச வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

பார்வதியின் இந்த பதிவிற்கு பலரும் பல விதமான கமெண்டுகளை போடு வந்தனர். அதில் ஒருவர் என்ன முட்டாள்தனம் இது ஒரே பாலினத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்வது நல்லதா அது இந்த உலகில் மிகப்பெரிய பாவம் இதை செய்பவர்களுக்கு கடவுள் எதிராகத்தான் இருப்பார் என்று பதிவிட்டிருந்தார். மற்றொருவரும் இது கிறிஸ்துவத்திற்கு எதிரானது பெரிய பஞ்சாயத்தை கிளம்பிடுவாங்க இப்படி எல்லாம் போட்டீங்கன்னா என்று கமெண்ட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் பல விதமான கமெண்டுகளை தனது ஸ்டோரியில் குறிப்பிட்டு பதில் அளித்த பார்வதி. கர்த்தர் ஓரினச்சேர்க்கை குறித்து ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது. அவர் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொன்னது கிடையாது. காதலுக்கு பாலினம் கிடையாது அதை புரிந்து கொள்ளுங்க. அதேபோல ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் குடும்பங்கள் மற்றும் தனி நபர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement