பிக் பாஸ் ஓவியா ’90Ml’ படத்தின் விமர்சனம் இதோ.!

0
877
90ml

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா நடித்துள்ள முதல் படம் 90 ml. இந்த படத்தின் ட்ரைலர்கள் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. உண்மையில் இந்த படம் பெண்கள் சுதந்திரம் பற்றிய படமா வாருங்கள் விமர்சனத்தை பார்ப்போம்.

கதைக்களம் :

குடும்ப வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கை என்று பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வரும் நான்கு பெண்கள் அவர்களை அந்த பிரச்சனையிலிருந்து விடுபடவும் பெண்கள் எப்படி தன் விருப்பத்துக்கு ஏற்றார் போல வாழ வேண்டும் என்பதையும் சொல்லித்தருகிறார் ஒரு தோழி, அவர்தான் ஓவியா இதுதான் இந்த படத்தின் கதை கரு.

இந்த படத்தில் தாமரை, காஜல், பாரு, சுகன்யா என்று நான்கு தோழிகள் இருக்கின்றது இவர்கள் நால்வருக்கும் பொதுவான ஒரு தோழி இருக்கிறார் அதுதான் ரீட்டா (ஓவியா). ரீட்டா திருமணம் செய்துகொள்ளாமல் தனது காதலருடன் தனது இஷ்டப்படி வாழ்ந்து வருகிறார்.

இந்த நான்கு பெண்கள் வாழ்க்கையிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. தாமரை மிகவும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் இதனால் அவருக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி பிரச்சினை வருகிறத. மற்றொரு தோழியான காஜல் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால், அவரது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது. இதனால் அவர்களது இல்லற வாழ்க்கையின் பாதிக்கப்படுகிறது.

மற்றொரு தோழியான பாரு, அவரது கணவர் திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து தோல்வி அடைந்து விடுகிறார் அதனால் பாருவுடன், அவரால் சந்தோஷமாக வாழ முடிவதில்லை. இறுதியாக சுகன்யா இவர், ஒரு ஓரினச்சேர்க்கையாளர், இவர் வேறு ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். ஆனால், அவரது பெற்றோர்களும் இந்த சமூகமும் அவர்களுக்கு திருமணத்திற்கு தடையாக உள்ளது.

இந்த நான்கு பெண்களும் ரீட்டாவான ஓவியாவிடம் செல்கின்றனர் அதற்கு ஓவியா நீங்கள் நால்வரும் உங்கள் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் உங்களுடைய அனைத்து பிரச்சினைகளிலும் நான் தீர்த்து வைக்கிறேன் என்று உறுதி அளிக்கிறார் அதன் பின்னர் ஓவியாவுடன் இணைந்து அந்த நான்கு பெண்களும் அவர்களது வாழ்க்கையை குடி,புகை கஞ்சா என்று அவர்கள் இஷ்டத்திற்கு சந்தோஷமாக வாழ்கின்றனர் இறுதியில் அந்த நான்கு பெண்கள் பிரச்சினையை ரீட்டாவான ஓவியா தீர்த்தாரா இல்லையா என்பதுதான் கதை.

90 ML Tamil Full Movie Download HD

ப்ளஸ் :

படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவில் பெரிய பிளஸ் ஒன்றும் கிடையாது இது ஒரு கமர்ஷியல் படம் அதுவும் அடல்ட் காமெடி கலந்த ஒரு படம். இந்த படத்தில் நீங்கள் சமூக அக்கறையையும் அல்லது பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே இந்த படத்தில் இயக்குனர் சொன்னது போல இந்த படம் 18 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கக்கூடிய படம் தான் ஆனால் இந்த படத்தில் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் இதுவரை விளங்கவில்லை.

மைனஸ் :

உண்மையைச் சொல்லப்போனால் இது போன்ற படங்களை கண்டிப்பாக இளைய சமுதாயத்திற்கு ஒரு சீர்கேடு என்று தான் சொல்ல வேண்டும். பேட்டிகளில் பெண் சுதந்திரம் என்று வாய்கிழியப் பேசிய இந்த படத்தின் இயக்குனர் புகைப்பிடிப்பதையும் குடிப்பதும் தான் ஆணுக்கு நிகராக பெண்கள் கேட்கும் சுதந்திரம் என்பது போல இந்த படத்தில் காண்பித்துள்ளது மிகப்பெரிய மைனஸ். அதே போல வாழ்க்கையில் பிரச்சினைகள் சந்திக்கும் பெண்களுக்கு இந்த படத்தில் இயக்குனர் சொல்லவரும் கருத்து மிகவும் ஏற்புடையதாக இல்லை என்பதுதான் உண்மை.

இறுதி மதிப்பு :

இந்த சமூகத்தில் அவனுக்கு இணையாக பெண்களுக்கும் உரிமை உண்டு என்பதை பல படங்கள் உணர்த்தியுள்ளது. ஆனால், இந்தப் படமும் அதே போன்ற கருத்தை எடுத்துக் கொண்டு வந்தாலும் புகைபிடிப்பது, தண்ணி அடிப்பது, ஓரின சேர்க்கை இவை அனைத்தும் பெண் சுதந்திரம் என்பது போல காண்பித்துள்ளது சமூகத்திற்கு ஒரு மோசமான எடுத்துக்காட்டாகும். இருப்பினும் ஹரஹர மகாதேவகி இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் ஆண்களின் உடல் காமெடியை பார்த்து ரசித்து அவர்களுக்கு இது ஒரு லேடிஸ் வெர்ஷன் அவ்வளவுதான். ஆனால், காமெடி என்ற பெயரில் மொக்கை தான் போட்டுள்ளனர். மொத்தத்தில் இந்த படத்திற்கு Behindtalkies-ன் மதிப்பு……….