பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தாமரைச்செல்வி. இவர் இதற்கு முன்பு மேடை நாடகங்களில் தான் நடித்து வந்தார். மேடையில் பாட்டு பாடி ஆடுபவர்களில் இவருக்கு தான் அதிக சம்பளம். அந்தளவிற்கு இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அதனால் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் இறுதி வாரம் வரை வந்தார். இவர் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதே போல தாமரை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்தார். அதற்கு பிறகு இவருக்கு சின்னத்திரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் அந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக நடித்து வந்தார். சீரியலில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பு பெற்றது. ஆனால், திடீரென்று இவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இவர் விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
தாமரை குறித்த தகவல்:
இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் தாமரைச்செல்வி, மேடை நாடகம் என்ற ஒரு சின்ன வட்டத்தில் சுத்திக் கொண்டிருந்த என்னை தமிழ் மக்களுக்கு தெரிய வைத்தது விஜய் டிவி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை தந்தது. நான் போன உடனே வெளியே வந்து விடுவேன் என்று நினைத்தார்கள். ஆனால், 90 நாட்களுக்கும் மேலே நான் அங்கிருந்தேன். நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்ததும் சீரியல் வாய்ப்பு கொடுத்தார்கள். சின்ன மருமகள் சீரியல் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

தாமரை செல்வி பேட்டி:
எனக்கு அறிமுகம் கொடுத்து சோறு போட்ட நாடகத்தை விட முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்ன சின்ன ஈவென்ட்கள், சினிமா வாய்ப்புகள் வந்தது எல்லாத்தையும் பேலன்ஸ் செய்தேன். இருந்தும் சில இடத்தில் கொஞ்சம் தடுமாறி இருந்தேன். ஒரே ஒரு நாள் சூட்டிங் தேதி தர முடியாமல் போய்விட்டது. அதற்காக உடனே சீரியலில் இருந்து என்னை தூக்கி விட்டார்கள். அது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இருந்தாலும் என்ன பண்றது இப்ப சினிமாவில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=RgOJ9ocjYbA
சீரியல் விலகல் காரணம்:
ஒரு படம் முடிந்திருக்கிறது. சீக்கிரமாக அறிவிப்பு வரும். அதேபோல் ஜீ தமிழில் கில்லாடி ஜோடி நிகழ்ச்சியில் அழைத்திருந்தார்கள். நானும் போனேன். நிகழ்ச்சி பற்றி எல்லாம் சொன்னார்கள். எல்லாத்துக்கும் நான் தயாராக இருக்கேன் என்று சொன்னேன். சரி போயிட்டு வாருங்கள் அழைக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை. திடீரென்று அடுத்த முறை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் அந்த நிகழ்ச்சியிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.






