பிகில் தென்றலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன். அப்படி என்ன கொடுத்திருக்கார் பாருங்க.

0
9107
Bigil

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடிக்கும் படங்கள் என்றாலே அது சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துவிடுகிறது. அதிலும் கடந்த சில காலமாகவே இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். மேலும், அதில் வெற்றியும் கண்டு வருகிறார். அதேபோல மற்றும் ஒருபுறம் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார் நயன். அந்த வகையில் சமீபத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருக்கிறார் நடிகை நயன்தாரா.

பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்துள்ளனர் இதில் ஒரு சில நடிகைகள் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார் அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் அறிமுகமாகியிருக்கிறார் அதேபோல இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரசிகர்களுக்கு சில பரிச்சயமில்லாத அறிமுக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : குழந்தை பிறந்த பின்னர் எமி ஜாக்சன் எப்படி மாற்றிட்டார் பாருங்க. ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் கால்பந்து வீராங்கனையாக நடித்த பல்வேறு நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகிவிட்டார்கள். அந்த வகையில் இந்த படத்தில் தென்றல் என்று கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளார். நடிகை அமிர்தா விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் சமந்தாவின் உறவினர் பெண்ணாக நடித்திருந்தார் அமிர்தா. அதன் பின்னர் கடந்த ஆண்டு வெளியான ‘படை வீரன்’ என்ற படத்தில் விஜய் யேசுதாஸ்ஸிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகை அம்ருதா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதற்காக நடிகை நயன்தாரா, கை கடிகாரம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் நயன்தாரா. அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்ருதா, எனக்கு மிகவும் பிடித்த நபர் அன்புள்ளம் கொண்ட நபர், எனக்கு எனது பிறந்த நாளன்று நீங்கள் கொடுத்த பரிசுக்கு மிக்க நன்றி. அது என்னுடைய பிறந்தநாளை சிறப்பாக ஆக்கி உள்ளது. இதை நினைத்து நான் என்றென்றும் பொறுத்துக் கொள்வேன். எனக்கு ஒரு மிகப்பெரிய முன் உதாரணமாக இருக்கும் உங்களுக்கு நன்றி. நயன்தாரா, சிங்கப் பெண்ணே என்று பதிவிட்டுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement