பிகில் படத்திற்கு பின்னர் விளையாட்டு கதை என்றாலே தெறித்து ஓடும் நடிகை. அவரே கூறிய விளக்கம்.

0
13675
bigil
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையான இந்துஜா வா இப்படி சொன்னார் என்று ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளார்கள். அதோடு சமூக வலைத்தளங்களில் இவரை குறித்து பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும், தன்னைக் குறித்து வெளியான வதந்திக்கு நடிகை இந்துஜா மறுப்பு தெரிவித்து உள்ளார். இவர் முதன் முதலாக குறும் படங்களில் தான் நடிக்க தொடங்கினார். அதற்கு பிறகு தான் இவர் 2017 ஆம் ஆண்டு வெளி வந்த மேயாத மான் என்ற திரைப் படத்தில் வைபவ்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இந்துஜா மக்களிடையே பிரபலமாக அறியப்பட்டார். அதோடு இவர் திரையுலகிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் 60 வயது மாநிறம், மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
indhuja

தமிழ் திரை உலகில் அறிமுகமான குறுகிய நாட்களிலேயே பல படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றவர். நடிகை இந்துஜா தன் நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் கொண்டு உள்ளார். தற்போது கூட அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளி வந்து திரையரங்களில் மாஸ் காட்டிய பிகில் படத்தில் நடிகை இந்துஜா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை இந்துஜா அவர்கள் இப்படி சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் இவரை குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது என்னவென்றால் நான் கமர்சியல் படங்களில் தான் நடிப்பேன்.

இதையும் பாருங்க : விஜய் சேதுபதியாளா தயாரிப்பு நிறுவனமே க்ளோஸ். மறைமுகமாக வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்.

- Advertisement -

அந்த மாதிரி கதை படங்கள் தான் வேணும். விருது வாங்கும் படங்களில் நடிக்க மாட்டேன். இதெல்லாம் விருது வாங்கும் நடிகைகளிடம் போய் சொல்லுங்கள் என்று நடிகை இந்துஜா கூறி உள்ளதாக செய்தித்தாள் ஒன்றில் வந்து உள்ளது. இந்த நியூஸை பார்த்து விட்டு நடிகை இந்துஜா மிகவும் பேர் அதிர்ச்சியானார். பின் அந்த நாளிதழை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு விளக்கம் கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியது, ஊடகங்கள் தான் மக்களின் நம்பிக்கை. அதுமட்டுமில்லாமல் சினிமாவின் முதுகெலும்பு என்று நான் நம்புகிறேன். என்னைப் பற்றி தவறான வதந்திகள் எழுந்து உள்ளது.

இதெல்லாம் பொய். நான் சினிமா மீது அதிக ஆர்வம் வைத்ததனால் தான் என் படிப்பை கூட பாதியில் நிறுத்திவிட்டேன். நான் சினிமாவை மிகவும் காதலிக்கிறேன். இது போன்று நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன். ஏதாவது ஒன்றை எழுத வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் எழுதாதீர்கள். உங்களுடைய வார்த்தைகள் மூலம் நான் மிகவும் காயப்பட்டு உள்ளேன். இந்த மாதிரி வந்த செய்திகள் எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது என்று பதிவிட்டு உள்ளார். மேலும், நடிகை இந்துஜாவை பிடிக்காத ஒருவர் தான் இந்த மாதிரி செயல்களைச் செய்திருக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement