அதற்க்கு பிறகு இங்கு தான் இவ்வளவு கூட்டம்.! என்னா மாஸ் தம்பிக்கு.! பிகில் இசை நிகழ்ச்சியில் பேசிய விவேக்.!

0
989
vijay-vivek
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ‘இளைய தளபதி’ விஜய், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான “பிகில்” படம் அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று வெளிவர உள்ளது என்ற தகவல்கள் சில வாரங்களாகவே சமூக வலைத் தளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது. . அதனின் கொண்டாட்டமாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் இந்த இசை வெளியிட்டு விழாவில் படக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக பேசி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்த படத்தில் நடித்துள்ள விவேக், சற்று முன்னர் மேடையில் பேசிய போது, அத்தி வரதருக்கு பின்னர் இவ்வளவு கூட்டத்தை நான் இங்கு தான் பார்க்கிறேன். நான் மதியம் 3.30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி 7.30 மணிக்கு தான் இங்கே வந்தேன். என்னா மாஸ் விஜய் தம்பிக்கு. அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர் எப்போதும் வெற்றி போதையை தனது தலைக்கு கொண்டு சென்றது இல்லை. ஒரு சிலர் செய்யும் சில முட்டாள் தனமான விஷயங்களை நிறுத்திக்கொண்டு அவருடைய வெற்றியையும் வளர்ச்சியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் மேடையில் தளபதி விஜய் என்ன பேசப் போகிறார்? என்ற கேள்வி மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முன்னால் வெளிவந்த புலி, சர்க்கார்,கத்தி ஆகிய படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மக்கள் மனதில் புதிய எண்ணத்தையும் தோற்றுவிக்கும் வகையிலும் , பல அரசியல்வாதிகளின் தில்லாலங்கடி வேலையை குறித்தும் , அரசியல்வாதிகளுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அப்படிப் பார்த்தால் இந்த முறை விஜய் எதை குறித்து பேச போகிறார்? என்று அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டிருக்கின்றன ரசிகர்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement