தமிழ் திரைப்பட உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ‘இளைய தளபதி’ விஜய்யின் 63 வது படமான “பிகில்” படம் திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் வரப்போகிறது. அதனின் கொண்டாட்டமாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு திருவிழா நடைபெறுகிறது என்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் அறிவித்தார். இந்த இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது என்றும் ,இந்த நிகழ்ச்சி குறித்த தகவல்கள் சன் டிவி தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் என்றும் அறிவித்தார்கள்.
இந்த விழாவை பிரபல தொகுப்பாளினியாக ரம்யா சுப்பிரமணியன் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் இளைய தளபதியின் பெண் ரசிகைகளுக்கு மட்டும் ஒரு போட்டி வைக்க போகிறேன் என்று நடிகை ரம்யா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அன்று இலவசமாக பிகில் படத்திற்கான டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் இந்த இசை வெளியிட்டு திருவிழாவை ரம்யா தான் தொகுத்து வழங்க போகிறார் என்ற மற்றொரு தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 63 வது படமான பிகில் படம் தீபாவளியன்று வரப்போகிறது என்று படக்குழுவினர் அறிவித்தனர்.மேலும் தீபாவளி அன்று திரை உலகிற்கு வரவிருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் தனுஷின் பட்டாசு ஆகிய இரு படங்களும் தள்ளி வைத்து உள்ளார்கள். இது குறித்து பிகில் படம் மட்டுமே தீபாவளிக்கு திரைக்கு வரப்போகிறது. மேலும் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய கிடா விருந்தாக இருக்கும் என்று வலைதளங்களில் பரவிவருகிறது.
அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் பிகில் படத்தை தீபாவளிக்கு முன்பாகவே திரையரங்கிற்கு கொண்டு வர இருப்பதாக ஒரு சில செய்திகளும் வந்துள்ளன. ஏனென்றால் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக் கிழமையாக உள்ளதால், 24ஆம் தேதி வியாழக்கிழமை அன்று திரையுலகிற்கு கொண்டுவரலாம் என்று ஒருபுறம் ஆலோசனை செய்துள்ளார்கள். கூடிய விரைவில் இதுகுறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.
மேலும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும்.