நான் எடுக்கும் படங்கள் எல்லாம் காப்பியா ? முதன் முறையாக மனம்திறந்த அட்லீ.

0
79197
atlee
- Advertisement -

சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ. மேலும்,அட்லீ அவர்கள் முதலில் தமிழ் சினிமாவிலேயே பிரம்மாண்ட இயக்குனர் என சொல்லப்படும் ஷங்கர் அவர்களின் ‘நண்பன் மட்டும் எந்திரன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் திரையுலகில் திரைப்படங்களை இயக்குவதற்கு முன்னால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘முகப்புத்தகம்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். பின்னர் தான் அவர் 2013ம் ஆண்டு ஆர்யா,ஜெய் நடிப்பில் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார். இந்த படம் அட்லீ தமிழ் சினிமா உலகில் முதலில் இயக்கிய படமாகும். பின் ராஜாராணி படத்தைத் தொடர்ந்து அட்லீ தளபதி விஜய் அவர்களின் “தெறி” படத்தை இயக்கினார்.

-விளம்பரம்-
atlee

இயக்குனர் அட்லீ இந்த படத்தின் மூலமே ரசிகர்களிடையேயும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும்,அட்லீ விஜயை வைத்து ‘மெர்சல்’படம் இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் படமாக மாறியது. தற்போது மூன்றாவது முறையாக விஜயையும்,அட்லீயும் இணைந்து வெளிவந்த படம் பிகில். மேலும், இந்த பிகில் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி திரையரங்குகளில் களைகட்டியது. மேலும், இந்த பிகில் படம் குறித்து கலவையான கருத்துக்கள் சமூக வலைத் தளங்களில் வந்துள்ளன. அதனோடு இயக்குனர் அட்லீ எடுக்கும் அனைத்து படங்களும் ‘காப்பி’ தான் என்ற ஒரு கருத்தும் பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். இது குறித்து பார்க்கையில் அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ திரைப்படம் அப்படியே ‘மௌன ராகம்’ படத்தின் கதையை சுட்டு எடுக்கப்பட்ட படம் என்று பலபேர் கூறியிருந்தார்கள்.

- Advertisement -

பின்னர் விஜய் நடிப்பில் வந்த ‘தெறி’ திரைப்படமும் ‘சத்ரியன்’ படத்தின் கொஞ்சம் மாடுலேஷன் பண்ணி எடுக்கப்பட்ட படம் என்றும் கூறியிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான மெர்சல் படமும் ‘மூன்று முகத்தின்’ ரீமேக் என்றும் கூறி வந்தார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் தற்போது விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள பிகில் திரைப்படமும் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த ‘சக்தே இந்தியா’ படத்தின் காப்பி என்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது மட்டுமில்லாமல் பிகில் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் எல்லாம் ‘பீலே’ படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் என்றும் அதோடு அந்த காட்சிகள் எல்லாம் பிகில் படத்துடன் ஓத்து போகக் கூடியது என்றும் அதற்கான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்கள் நெட்டிசன்கள்.

raja rani mounaragam
 theri chathriyan

மேலும், இயக்குனர் அட்லீ குறித்து இணையங்களில் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.அதுமட்டும் இல்லாமல் அட்லீ படம் என்றாலே ‘காப்பி’ தான் என்று கூறப்படும் அளவிற்கு அவருடைய இமேஜை பாதிக்கும் வகையில் இணையங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து இயக்குனர் அட்லி இடம் கேட்டபோது அவர் கூறியது, நான் திரையுலகில் பார்த்த படங்களில் நிறைய படங்கள் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது, நான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2,000 படங்களையாவது நான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பின் ஒரு படத்தை எடுக்கும் போது அந்த கதையில் உண்மையையும், நியாயத்தையும் பொருத்தி எடுக்க வேண்டும். அப்படி உண்மையாக இருந்தால் தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

-விளம்பரம்-

மேலும், நீங்கள் உண்மையாகவே கதையை எழுதி அதை படமாக்கிய இருந்தால் அது உங்கள் படம் என்று கூறுவதில் அர்த்தம் இருக்கிறது. மக்கள் ஏதாவது ஒன்னு சொல்லனும் என்பதற்காக வேறு படங்களுடன் ஒப்பிட்டு இந்த படம் காப்பி, ரீமேக் என்று கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். இது பாதுகாப்பற்ற தன்மை. மேலும், எனக்கு அந்த பாதுகாப்பற்ற தன்மை இல்லை என்றும் இந்த படத்தின் கதை உள்ளடக்கம் என்னுடையது. மேலும், நானும் அவர்கள் கூறிய படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். எனக்கும் அந்த படங்களில் இருக்கும் ஒரு சில காட்சிகள் ரொம்ப பிடிக்கும். மேலும், பிகில் படத்தில் இருக்கும் காட்சிகள் அந்த படத்தின் பாதிப்பில் இருந்து உருவானது அல்ல. என் மனதில் தோன்றியதை நான் இயக்கினேன் என்று அட்லி அவர்கள் ஆணித்தரமாகக் கூறினார்.

Advertisement