முன்னாள் கால்பந்து வீரர், நடிகர், இப்போ போலீஸ் உயர் அதிகாரி – பிகில் பட வில்லன் பற்றி தெரியுமா ?

0
1170
vijayan
- Advertisement -

அட்லீ இயக்கத்தில் இளைய விஜய் நடிப்பில்கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘பிகில்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷாராப், ஆனந்த் ராஜ், விவேக், யோகி பாபு, கதிர், டேனியல் பாலாஜி, இந்துஜா, ரேபா மோனிகா, ரோபோ சங்கர் மகள் என்று பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.அதிலும் இந்த படத்தில் கால்பந்து விளையாட்டு அணியில் இருந்த அனைத்து நடிகர்களுமே உண்மையான கால்பந்தாட்ட வீரர்களை போல நடித்திருந்தனர்.

-விளம்பரம்-
https://twitter.com/IMVijayan1/status/1396366428748484609

அதிலும் பிகில் படத்தில் வில்லனாக நடித்த இவருக்கும் கால்பந்தாட்டத்திற்கும் நிறையவே சம்மந்தம் இருக்கிறது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இவர் தான் நிஜ வாழ்வில் ஒரு உண்மையான பிகில். இவர் வேறு யாரும் இல்லை, இவரும் ஒரு பிரபல கால்பந்தாட்ட வீரர் தான். இவருடைய பெயர் ஐ எம் விஜயன். கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்ட இவர் வறுமையின் காரணமாக ஆரம்பத்தில் திருச்சூர் முனிசிபாலிட்டி மைதானத்தில் சோடா விற்று வந்தார். சிறுவயது முதலே கால்பந்தாட்டத்தில் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த விஜயன், பின்னர் கேரள டிஜிபி மூலமாக கேரளா காவல்துறையில் கால்பந்தாட்ட கிளப்பில் தனது 17 வயதில் இணைந்தார்.

இதையும் பாருங்க : சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ஜோதி சீரியல் பற்றி தெரியுமா ? ஏற்கனவே இந்த டிவியில் வந்த சீரியல் தான் இது.

- Advertisement -

கேரள காவல்துறை கால்பந்தாட்ட அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த விஜயன் பல்வேறு போட்டிகளில் தனது அபார ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார்.அதன்பின்னர் பல்வேறு போட்டிகளில் ஆடிய விஜயன் பல்வேறு கால்பந்தாட்ட கிளப்பில் ஆடி வந்தார். மேலும், 1999 ஆம் ஆண்டு சவுத் ஏசியன் பெடரேஷன் நடத்திய கால் பந்தாட்ட போட்டியில் 12 நொடிகளில் கோல் அடித்து சாதனை படைத்தார்.அந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு விஜயன் ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தார். அதன்பின்னர் 2003ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து விலகினார்.

இதுவரை 40 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய விஜயன், 29 கோல்களை அடித்துள்ளார். கால்பந்தாட்ட விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.மலையாளத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயன் தமிழில் திமிரு, கொம்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.ஓய்வுக்குப் பிறகு பல கால்பந்து அணிகளுக்குப் பயிற்சியாளராக பணியாற்றிய விஜயன் கேரள காவல்துறையில் அசிஸ்டென்ட் காம்ண்டன்ட்டாக பணியாற்றி வருகிறார். இப்படி ஒரு நிலையில்

-விளம்பரம்-
Advertisement