மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பிகில் பட நடிகரின் தந்தை – யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க.

0
1172

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மிக பெரிய வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நன்முறையில் நடைபெற்றது. இப்படத்தை பார்க்க பல கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும், இந்த படத்தை அடுத்து விஜய் அவர்கள் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது மாஸ்டர் படம் குறித்து செம்ம மாஸ் தகவல் ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால், பிகில் படத்தில் விஜய்யின் நண்பராக நடித்தவர் தான் கதிர். இவரின் அப்பா தற்போது விஜய் நடித்து உள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளதாக நடிகர் கதிர் தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : முதன் முறையாக இதுவரை இல்லாத அளவு கிளாமர் போஸ். கடைக்குட்டி சிங்கம் சீரியல் நடிகை ஷிவானியின் இன்ஸ்டா புகைப்படம்.

- Advertisement -

இதனால் தன் அப்பா மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் கதிரும் ஒருவர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் 2013ம் ஆண்டு வெளிவந்த மதயானைக்கூட்டம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், ஜடா போன்ற பல படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-
Advertisement