விருதை திருப்பி கொடுத்த பாலா – போட்டியாளர்கள் பற்றி புதிய சர்ச்சையை கிளப்பிய அனிதா (யார சொல்றாரு)

0
1545
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண் போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார். சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் தனக்கு கொடுத்த விருதை திருப்பிக்கொடுப்பதாக அறிவித்து இருந்தார்.

- Advertisement -

விருது வாங்கிய போது யூடுயூப்பில் review என்ற பெயரில் போட்டியாளர்களை பற்றி அவதூறாக பேசியது குறித்து பேசியதாகவும் ஆனால், அந்த வீடியோவை ஒளிபரப்பவில்லை என்று கூறி இருந்தார். இதனால் பாலாஜி இந்த விருதை திருப்பிக்கொடுத்துள்ளார்.இதுகுறித்து பதிவிட்டுள்ள அனிதா சம்பத், விரைவில் இவர்களின் முகமூடி கழல போகிறது. மற்ற போட்டியாளர்களை மட்டமா பேச ஆளுக்கு 30 ஆயிரம் குடுத்து பேட்டி எடுத்த மேட்டரும் சீக்கிரம் வெளிய வரும். பெருமையாக இருக்கிறது பாலா என்று பதிவிட்டு இருந்தார்.

அதே போல நேர்மையாக இருப்பவர்கள் வெளியேறிய பின்னர் பேட்டி கொடுக்கவில்லை. அப்படியே கொடுத்தாலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை பற்றி தவறாக பேசவில்லை. அப்படி செய்தவர்கள் 20 ஆயிரம் 30 ஆயிரம் பணத்திற்காக செய்தார்கள்.வயித்தெரிச்சல்ல அவர்கள் விரைவில் வெளியேறி விட்டார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள்ள நேரடியாக மோத முடியாத கோழை, வெளியே வந்து நினைச்சதை பேசுவாங்க. அவங்களுக்கு பிடிக்காதவங்க சீக்கிரம் எலிமினேட் ஆகணும்னு மக்களை உசுப்பேத்தி அவர்களுடைய வாக்க குறைக்க பாப்பாங்க. இது எல்லாத்தையும் தாண்டி நான் 85 நாள் உள்ளே இருந்தேன். அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

-விளம்பரம்-
Advertisement