பிகில் நடிகை கொடுத்த வித்தியாசமான பிறந்தநாள் பரிசு – பெட் ரூமில் வைத்துள்ள விஜய் – எப்படி யோசிச்சி இருகாங்க பாருங்க.

0
7882
bigil
- Advertisement -

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தனர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் இந்த படத்தில் மின்னொளி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஆதிரை சௌந்தரராஜன். இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு பிகில் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது வித்தியாசமான மறக்க முடியாத பரிசு ஒன்றை கொடுத்து இருப்பதாக கூறியிருக்கிறார் நடிகை ஆதிரை. இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகை ஆதிரை, பிகில் படத்தின் படப்பிடிப்பின்போது எங்கள் அணியில் இருந்தவர்கள் அனைவரும் விஜய்க்கு பிறந்தநாள் பரிசு கொடுத்தார்கள்.

- Advertisement -

ஒருநாள் படப்பிடிப்பு முடிந்த பின்னர் நான் விஜய்யிடம் சென்று ஒரு இரண்டு நிமிடம் காத்திருங்கள் உங்களுக்கு ஒரு பரிசு வாங்கி வைத்திருக்கிறேன் என்று சொன்னேன். ஆரம்பத்தில் அதை வேண்டாம் என்று சொன்ன அவர் பின்னர் வாங்கிக் கொள்வதாக சம்பாதித்தார். நான் வாங்கிய பிறந்தநாள் பரிசு கொஞ்சம் வித்தியாசமானது. பிகில் படத்தில் இடம்பெற்ற மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு அணிகள் இருப்பது போலவே பொம்மைகள் அடங்கிய ஒரு பரிசுதான் அது.

அதை நம் கைகளில் வைத்து விளையாடலாம் இந்த கேமில் எங்கள் அணியின் கோச் பிகில் படத்தில் வரும் விஜய்யின் கேரக்டர் தான். அதில் அவரது ஜெஸ்ஸி என் கூட மாறாமல் அப்படியே உருவாக்கி இருந்தேன். இந்த பரிசை பார்த்துவிட்டு உண்மையிலேயே பிகில் அணியை பார்ப்பது போல உணர்வதாக கூறினார். மேலும் அந்த பரிசினை தனது பெட் ரூமில் வைத்திருப்பதாகவும் சில நேரங்களில் அதில் கேம் விளையாடுவதாகவும் அடுத்த நாள் படப்பிடிப்பின்போது என்னிடம் தெரிவித்தார் என்று கூறியிருக்கிறார் ஆதிரை.

-விளம்பரம்-
Advertisement