பிறந்தநாளில் செய்த ப்ரொபோஸ் – திருமணத்திற்கு தயாரான பிகில் பட நடிகை. ஜோடி பொருத்தத்தை பாருங்க.

0
476
reba
- Advertisement -

பிறந்தநாளில் ப்ரொபோஸ் செய்த இளைஞரின் ப்ரோபோசலை ஏற்றுள்ளார் பிகில் பட நடிகை. அட்லீ இயக்கத்தில் இளைய விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்திரஜா, இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்த பல்வேறு புது முக நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் இளம் நடிகையான ரேபா மோனிகா ஜானும் ஒருவர்.

-விளம்பரம்-
reba Monica bigil girl wedding

இந்த படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா. மேலும், இந்த படத்தின் ஒரு காட்சியில் காதலை ஒப்புக்கொள்ளவில்லை என்று இவர் முகத்தில் ஒருவர் ஆசிட் அடித்து விடுவார். இதனால் கால்பந்து விளையாடுவதையே நிறுத்துவிடுவார் அனிதா (ரேபா). அதன் பின்னர் இவரை விஜய் சந்தித்து மீண்டும் கால்பந்து போட்டியில் பங்கு பெற செய்வார். இவரின் ரீ- என்ரியின் போது தான் ‘சிங்கப்பெண்னே’ பாடலே வரும்.

- Advertisement -

இதனால் மற்ற பெண்களை விட ரேபா மோனிகா ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டார். பிகில் படத்திற்கு முன்னதாகவே இவர், ஜெய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஜருகண்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், பிகில் படத்திற்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டது. இந்த நிலையில் நடிகை ரேபா, கடந்த ப்ரவரி 4 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினர். துபாயில் நடந்த பிறந்தநாள் விழாவில் திடீரென ஒரு இளைஞன் தனது காதலை வெளிப்படுத்தி, நடிகையை ஆச்சரியப்படுத்தினார். ரெபாவும் அந்த புரோபோசலுக்கு உடனே ஓகே சொல்லி விட்டார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஜோய்மோன், லாக் டவுனால் ரெபாவை சந்திக்க முடியவில்லை என்றும், கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் அவரைப் பார்த்து உடனடியாக புரொபோஸ் செய்ய முடிவு செய்ததாகவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ரெபாவும் ஜோய்மோனும் சில ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் இப்போதுதான் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இருவரும் முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement