தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்திருக்கிறது. அந்தவகையில் விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்த படம் பிகில். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்து இருந்தது.
மேலும், இந்த படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து பிரபலமானவர் ரேபா மோனிகா ஜான். மேலும், இந்த படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா. இந்த படத்தின் ஒரு காட்சியில் காதலை ஒப்புக்கொள்ளவில்லை என்று சொன்னவுடன் ஒருவர் ஆசிட் அடித்து விடுவார். இதனால் கால்பந்து விளையாடுவதையே நிறுத்துவிடுவார் அனிதா (ரேபா). அதன் பின்னர் இவரை விஜய் சந்தித்து மீண்டும் கால்பந்து போட்டியில் பங்கு பெற செய்வார்.
பிகில் படத்தில் ரேபா மோனிகா:
இவரின் ரீ- என்ரியின் போது தான் ‘சிங்கப்பெண்னே’ பாடலே வரும். இதனால் மற்ற பெண்களை விட ரேபா மோனிகா ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டார். பிகில் படத்திற்கு முன்னதாகவே இவர் ஜெய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜருகண்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், பிகில் படத்தின் மூலம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டது. இவர் 2016 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த JACABONITE SWARKARAJYAM என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
ரேபா மோனிகா நடிக்கும் படங்கள்:
மேலும், பிகில் படத்திற்கு பிறகு இவர் பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் FIR என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை ரெபா மோனிகா ஜான் தற்போது ரகசியமாக திருமணம் செய்து கொண்டு உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் நடந்த ரகசிய திருமணம்:
இவருடைய திருமணம் கடந்த ஜனவரி 9ம் தேதி அன்று கேரளாவில் நடந்தது. இவர் நீண்ட நாட்களாக ரேபா மோனிகா- ஜியோமான் இருவரும் காதலித்து வந்தார்கள். தற்போது இருவரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்திருக்கிறார்கள். இவர்களுடைய திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி சினிமா உலகில் படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் நடிகை ரேபா மோனிகா உடைய ரகசிய திருமணம் ரசிகர்களுக்கு ஷாக்கை ஏற்படுத்தி இருக்கிறது.
ரேபா மோனிகாவுக்கு ப்ரொபோஸ் செய்த ஜியோமான்:
இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ரேபா மோனிகாவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களை வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். நடிகை ரேபா கடந்த ப்ரவரி 4 ஆம் தேதி தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடினர். அதில் ஜியோமான் திடீரென தனது காதலை வெளிப்படுத்தி இருந்தார். ரெபாவும் அந்த புரோபோசலுக்கு உடனே ஓகே சொல்லி விட்டார். மேலும், ரெபாவும் ஜோய்மோனும் சில ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.