பிகில் படத்திற்கு எதிராக இறங்கிய இறைச்சி வியாபாரிகள்.! காரணம் இது தான்.!

0
1186
vijay
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ‘இளைய தளபதி விஜய்’.அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான “பிகில்” படம் அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று வெளிவர உள்ளது என்ற தகவல்கள் சில வாரங்களாகவே சமூக வலைத் தளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது.மேலும்,பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.மேலும் இந்தப் படத்துக்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். விஜய் நடிப்பில் வரவிருக்கும் விஜயின் 63 வது படமான ‘பிகில்’ ரசிகர்களிடையே அதிக ஆர்ப்பாட்டத்தையும், ஆவலையும் தூண்டியுள்ளது.

-விளம்பரம்-
பிகில் பட போஸ்டரை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட இறைச்சி வியாபாரிகள்!

இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.அது அப்பா மற்றும் மகன் வேடத்தில் நடித்து உள்ளார். இதில் மகன் “மைக்கேல்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பாவின் பெயர் “ராயப்பன்” என மிரட்டலான ,அதிரடி பெயரை வைத்து உள்ளார்கள். போஸ்டரில் அப்பாவை பார்க்கும்போது கறிகளை வெட்டும் கசாப்கரன் என்று தெரிய வருகிறது. இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும். விஜய் படம் என்றாலே ஒரு பிரம்மாண்டமாகவும், அதிக பட்ஜெட் செலவிலும் இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. இதற்காக விஜய் ரசிகர்கள் ‘தளபதி63’ என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதில் விஜய் படம் சம்பந்தமான தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பிகில் படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் கண்டு கழிக்கும் ஒரு அற்புதமான படமாக இருக்கும்.

- Advertisement -

அதனின் கொண்டாட்டமாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு விழா தனியார் கல்லூரியில் மீரல வைக்கும் அளவிற்கு நடந்து முடிந்தது.இந்த இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவர்கள் பேசிய வார்த்தைகள் அதிமுகவுக்கு எதிராக விமர்சனங்கள் செய்தது போல இருந்தது.மேலும்,பிகில் போஸ்டரில் இறைச்சி வெட்டும் முட்டி (கட்டை) மீது செருப்புக் கால் வைத்து விஜய் அவர்கள் அமர்ந்து இருக்கிறார்.அதை இறைச்சி வியாபாரிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.மேலும், விஜய் பிகில் பட போஸ்டர் இறைச்சி கடைக்காரர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று கறிகடை உரிமையாளர் கோபால் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறியது, இந்தியாவில் உள்ள அனைத்து இறைச்சி கடை வியாபாரிகள் அனைவரும் காலையில் கடை திறந்த பின் தெய்வமாக நினைத்து வணங்குவது நாங்கள் தொழில் செய்யும் முட்டி, கத்தி தான்.

ஆனால், விஜய் அவர்கள் அதன் மீது செருப்பு கால் வைத்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியிடுவது மொத்த வியாபாரிகளையும் செருப்பால் அடித்தது போல் எங்களுக்கு உணர்வை ஏற்படுத்துகிறது என்று கூறியிருந்தார்கள். மேலும், அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் , அந்த காட்சி வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் வியாபாரிகள் மத்தியில் கலவரம் ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து , ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும் இயக்குனர் அட்லிக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்தார்கள். அதற்கு பதில் கூறும் வகையில் ஏஜிஎஸ் நிறுவனமும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள். மேலும், அவர்கள் அந்த போஸ்டர் கான விளக்கத்தையும் கூறியிருந்தார்கள். ஆனால், இறைச்சி கடை வியாபாரிகள் திரைப்படத்தில் இருந்து காட்சிகளை நிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கறி கடை உரிமையாளர்கள் சார்பாக கேட்டுக்கொண்டார்கள். மேலும் அவர்களிடம் மனுவும் அளித்தார்கள்.ஆனாலும் , மனு அளிக்கும் போது பிகில் போஸ்டரை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் ஏற்பட்டது.

-விளம்பரம்-
Advertisement