விஜய் பிறந்தநாளுக்கு ‘பிகில்’ தயாரிப்பாளர் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ.! செம மாஸ்.!

0
1227
Vijay-Birthday

இளைய தளபதி விஜய் தனது 45வது பிறந்தநாளை இன்று(ஜூன் 22) கொண்டாடுகிறார். விஜயின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். மேலும், சமூக வலைதளத்தில் பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனை முன்னிட்டு அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘தளபதி 63’ பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகியுள்ளன. ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி சில நிமிடங்களில் டிரெண்ட் ஆனது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு வெளியான செகண்ட் லுக் போஸ்டர் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாத வகையில் உள்ளது.

- Advertisement -

மைக்கேல் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சி அணிந்தபடி நிற்கும் கால்பந்தாட்ட வீரர் விஜய், கையில் கத்தி, கழுத்தில் சிலுவை, நெற்றியில் திருநீறு, குங்குமம் என ரெளத்ரமாக நிற்கும் மற்றொரு விஜய் என இரண்டாவது போஸ்டர் உள்ளது. இன்று (ஜூன் 22 )நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் என்பதால் அவர் ரசிகர்கள் படப்போஸ்டர்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தளபதினா யாரு என்ற கேள்விக்கும் பதிலளித்துள்னர்.

-விளம்பரம்-

Advertisement