பிகில் படத்திற்காக உருவாகும் ராயப்பனின் சிலை. வைரலாகும் புகைப்படம்.

0
3567
Bigil
- Advertisement -

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் வந்து விட்டது. பொதுவாக விஜய் படம் வந்தாலே ரசிகர்கள் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடுவார்கள். அதுவும் தீபாவளி போன்ற திருநாளில் படம் வந்தால் கேட்கவா வேண்டும். விஜய்யின் 63 வது படமான பிகில் படம் தீபாவளிக்கு முன்னாடியே அனைத்து திரையரங்குகளில் வெளியாகும் என்பதை அறிந்து விஜய் ரசிகர்கள் பயங்கர குஷியில் கொண்டாடி வருகின்றனர். இந்த தீபாவளிக்கு பிகில் படம் தான் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி போல இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் அட்லியும், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்து உள்ளார்கள். மேலும்,ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த பிகில் படம் முழுக்க முழுக்க பெண்களின் ‘கால் பந்தாட்டத்தை’ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான பிகில் படத்தின் ட்ரைலர் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது. இந்நிலையில் பிகில் படம் குறித்து பல விவாதங்களும், சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தளபதி விஜய் அவர்கள் கூறிய குட்டி குட்டி கதையினால் பயங்கர கலவரமே நடக்கிறது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் பிகில் போஸ்டரில் இளைய தளபதி விஜய் அவர்கள் கறி வெட்டும் கட்டையின் மீது செருப்பு கால் வைத்து உட்கார்ந்து உள்ளார் என்று கரிகடை சங்கத்தினர் அனைவரும் போஸ்டர் கிழித்து தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். மேலும்,பிகில் படத்தின் போஸ்டர்களை மாற்ற வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும், டிரைலர் வெளியாகி சில நிமிடங்கள் கூட இருக்காது ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் “சக் தே” படத்தை ரீமேக் செய்து உள்ளார்கள் என்று தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இயக்குனர் கே.பி.செல்வா என்பவர் உயர் நீதிமன்றத்தில் இந்த படம் என்னுடைய கதையில் இருந்து திருடியது என்றும் வழக்கு தொடர்ந்துள்ளது. இப்படி இணையதளங்களில் பிகில் படம் குறித்து பல சர்ச்சைகளும் விவாதங்களும் போய்க் கொண்டே தான் இருக்கிறது.

இப்படி தளபதி விஜயின் பிகில் படம் ஷூட்டிங் தொடங்கிய நாளிலிருந்தே திரைக்கு வரும் நாள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தளபதிக்காக என்ன வேண்டும் செய்வார்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இதை மீண்டும் பிகில் படம் மூலம் ரசிகர்கள் நிரூபித்துள்ளார்கள். பிகில் படத்திற்காக ரசிகர்கள் தங்களுடைய முதுகில் கொக்கியை மாட்டி கொண்டு அந்தரத்தில் தொங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும் நாகை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ரசிகர்கள் மாரியம்மன் கோயில் சிறப்பு வழிபாடு பூஜை நடத்துகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த வழிபாட்டு பூஜையில் பிகில் படம் வெற்றிபெற வேண்டும் என்றும், பிளாக்பஸ்டர் படமாக அமைய வேண்டும் என்றும், விஜய் நீண்ட காலம் நீடூடி வாழ வேண்டும் என்றும் விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டார்கள். இப்படியும் விஜய்க்கு ரசிகர்கள் உள்ளார்களா! என்று பாராட்டி வருகின்றனர். இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் ராயப்பன் கதாபாத்திரம் உருவ சிலைகளை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. மேலும்,படம் வெளிவருவதற்கு முன்பே பிகில் படத்தின் உருவச் சிலைகளைச் செய்து வருகின்றனர் ரசிகர்கள். இதன் மூலம் பிகில் படம் குறித்து பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர்.

Advertisement