நீண்ட வருடங்களுக்கு பின்னர் நடிகர் சார்லிக்கு கிடைத்த பட்டம். குவியும் பாராட்டு.

0
4593
Charlie
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் சார்லி. தற்போது அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் முனைவர் பட்டம் வழங்கி உள்ளார்கள். மேலும், நடிகர் சார்லி முனைவர் பட்டம் வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. நடிகர் சார்லி விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியை சார்ந்தவர். மேலும்,1960 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி பிறந்த நடிகர் சார்லிக்கு தற்போது 50 வயது ஆகிறது.வேல்முருகன் தங்கசாமி மனோகர் சார்லி என்பதை தான் சுருக்கி “சார்லி” என்று வைத்துள்ளார். இவருடைய இயற்பெயர் மனோகர் ஆகும். மேலும்,ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் மீது கொண்ட பற்றின் காரணமாக திரையுலகில் தனது பெயரை சார்லி என மாற்றிக் கொண்டார். இவர் 700க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா உலகிற்கு முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘பொய்க்கால் குதிரை’ மூலம் அறிமுகமானர்.

-விளம்பரம்-
Charlie

பின்னர் இவர் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை, குணச்சித்திரம் என்று பல கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கிறார். நடிகர் சார்லி தமிழில் பிரண்ட்ஸ், வெற்றிக்கொடிகட்டு, காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, தற்போது நகைச்சுவை நடிகர் விவேக் உடன் நடித்த வெள்ளைப் பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனால் மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் சினிமா திரை உலகில் தனக்கென ஒரு பாதையையும் உருவாக்கி முத்திரை பதித்துள்ளார். பொதுவாகவே திரையுலகை சேர்ந்த நடிகர்கள் சினிமாவில் பட வாய்ப்பு குறைவு தொடங்கியவுடன் பிசினஸ், அரசியல் என புகுவது தான் வழக்கம். ஆனால் நடிகர் சார்லி அப்படி எல்லாம் செய்யாமல் ஆய்வு செய்ய தொடங்கினர். மேலும், தனது ஓய்வு நேரத்தை முழுவதும் ஆய்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தினார். இவர் “தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை” என்ற பெயரில் ஆய்வு செய்தார்.

- Advertisement -

மேலும், அவர் ஆய்வு செய்த அறிக்கையை சமர்ப்பித்தார். தற்போது சார்லி அவர்கள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களும் கலந்து கொண்டுள்ளார். மேலும், இது மாணவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் முனைவர் பட்டங்களை வழங்கும் விழாவாகும். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் நடிகர் சார்லி செய்த தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற ஆய்வின் அறிக்கைக்காக முனைவர் பட்டத்தை வழங்கினார்.

இவர்களோடு ஆட்சி மொழி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அதோடு நடிகர் சார்லி அவர்கள் இந்த முனைவர் பட்டம் பெறுவதற்கு முன்னால் 2013-ஆம் ஆண்டு “தமிழ் திரைப்பட வளர்ச்சிக்காக நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பட்டம் வாங்கி உள்ளார். முனைவர் பட்டம் பெற்ற நடிகர் சார்லிக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Charlie
Advertisement