விளையாடாலதான் அடையாளமே மாற போகுது.. ‘பிகில்’ படத்தின் ட்ரைலர் இதோ..

0
2745
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ‘இளைய தளபதி’ விஜய்யின் 63 வது படமான “பிகில்” படம் திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. சர்க்கார் படத்திற்கு பின்னர் நீண்ட விஜய் நடிக்கும் இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது விஜய் மற்றும் அட்லீ கூட்டணி. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய், அப்பா மகன் என்று இரண்டு வேடத்தில் அசத்தியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, யோகி பாபு, இந்துஜா, கதிர், ஆனந்த் ராஜ், ஜாக்கி ஷாராப் என்று ஒரு ஒட்டு மொத்த நட்சத்திர பட்டாலமே நடித்துள்ளனர். நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் வழக்கம் போல விஜய் பேசிய பேச்சும் குட்டி கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.அதே போல விஜய்யின் பேச்சு அரசியல் காட்சியனரிடையும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.இந்த படத்தில் விஜய்யின் அப்பாவின் பெயர் “ராயப்பன்” என மிரட்டலான ,அதிரடி பெயரை வைத்து உள்ளார்கள். போஸ்டரில் அப்பாவை பார்க்கும்போது கறிகளை வெட்டும் கசாப்கரன் என்று தெரிய வருகிறது.

- Advertisement -

இன்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாக இருந்ததால் பிகில் படம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. மேலும், அப்பா விஜய் ராயப்பன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததால் இந்த படத்தில் அதிரடியாகவும், ஆக்சன் காட்சி ஆகவும் இருக்கும் கதாபாத்திரம் என்று ரசிகர்கள்இந்த படத்தின் ட்ரைலரை மிகவும் எதிர்பார்த்து வந்தனர். மேலும், தளபதி63 என்ற ஹாஸ்ட்டாக்கை உருவாக்கி பிகில் படத்திற்கான தகவல்களை பதிவிட்டு வருகிறார்கள். விஜய் படம் என்றாலே ஒரு பிரம்மாண்ட ஆகவும் அதிக பட்ஜெட் செலவிலும் இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிகில் படம் ஒரு மாபெரும் வெற்றி விழாவை கொண்டாடும் அளவிற்கு எடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த படம் மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில் அவர்கள் திருப்தி அடையும் வகையில் உள்ளது என்று கூறி உள்ளார்கள்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் கண்டு கழிக்கும் ஒரு அற்புதமான படமாக இருக்கும். மேலும், இந்த படத்தில் நயன்தாரா விஜய்யின் ஜோடியாக நடிக்க இருப்பதால் ரசிகர்களுக்கு மேலும் கொண்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 63 வது படமான பிகில் படம் தீபாவளியன்று வரப்போகிறது என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்தனர். மேலும், தீபாவளி அன்று திரை உலகிற்கு வரவிருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் தனுஷின் பட்டாசு ஆகிய இரு படங்களும் தள்ளி வைத்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இதனால் இந்த தீபாவளிக்கு பிகில் மட்டும் தனித்து நின்று விசிலடிக்கபோகிறது. மேலும், இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய கிடா விருந்தாக இருக்கும் என்று வலைதளங்களில் பரவிவருகிறது. இந்த மாதம் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருப்பது ரசிகர்ளுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்து வந்தது. வழக்கமாக டீசரை வெளியிட்ட பின்னர் தான் ட்ரைலர் வெளியாகும் ஆனால், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் நேரடியாக ட்ரைலரையே வெளியிட்டு ரசிகர்களுக்கு படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியினை கொடுத்துள்ளனர்.

Advertisement