சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும். 10 நாளில் பிகில் வசூல் எவ்வளவு தெரியுமா ?

0
4816
Bigil
- Advertisement -

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக இளைய தளபதி என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய் இவரது படங்கள் என்றாலே அது பிளாக்பஸ்டர் ஹிட் என்பதுதான் ரசிகர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும், 200 கோடி மேல் வசூல் சாதனை செய்திருந்தது. சர்க்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
Image

கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், ஆனந்தராஜ், யோகிபாபு ,விவேக், கதிர் இந்துஜா, டேனியல் பாலாஜி என்று ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய தீபாவளி கொண்டாட்டமாகவே அமைந்துள்ளது. மெர்சல் படத்திற்கு பின்னர் இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் விஜய். அதிலும் அப்பா கதாபாத்திரத்தில் வரும் ராயப்பன் தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறார். பொதுவாக விஜய் படங்கள் என்றாலே வெளியான ஒரு சில நாட்களிலேயே வசூல் சாதனையை செய்து விடும். அந்த வகையில் இந்த திரைப்படமும் வசூல் வேட்டையில் அடித்து நொறுக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ஒரு சில எதிர்மறைவான விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

Image

மேலும், பல்வேறு திரையரங்குளில் இருந்து இந்த திரைப்படம் நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், வெளியான 6 நாட்களில் இந்தப்படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இந்த திரைப்படம் வசூல் சாதனைகளை படைத்தது வருகிறது. இந்த படம் வெளியாகி 10 நாளில் 220 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இன்னும் ஒரு சில நாட்களில் 250 கோடி வசூலை செய்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதே 250 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement