பெட்ரோல் விற்கும் விலைக்கு தண்ணீரால் ஓடும் பைக்..!தமிழக இளைஞர் சாதனை..!

0
1773
Murugan-Bike
- Advertisement -

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பெட்ரோலின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தாள் நடுத்தர மக்கள் அனைவரும் வாகனத்தை பயன்படுத்த முடியாத நிலை வந்தாலும் அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

-விளம்பரம்-

பெட்ரோலுக்கு நிகராக மலிவு விலை பெட்ரோலை கண்டுபிடித்த ராமர் பிள்ளையின் கண்டுபிடிப்பும் கிடப்பில் தான் உள்ளது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த இளம் விஞ்ஞாணி ஒருவர் விட்ருக்கு 40கிலோ மீட்டர் வரை செல்லும் புதிய பைக் ஒன்றை தயார் செய்துள்ளார்.அதிலும் தண்ணீரில் ஓடக்கூடிய பைக் என்றால் நம்ப முடியுமா.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த ரெங்கசாமிபுரத்தை சேர்ந்தவஇளம் விஞ்சஞானி முருகன்சிறு வயதில்இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் மிகுந்தவர். தனது கண்டுபிடிப்புகளுக்காக பல பரிசுகள், பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில்தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலச் சங்கத்தின் 7-ம் ஆண்டு விழா சென்னை வடபழனியில் நேற்று நடந்தது.  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற முருகன் நீரால் இயங்கும் புதிய பைக் ஒன்றை அறிமுக படுத்தியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்த பைக் குறித்து முருகன் பேசுகையில்
இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு மட்டும் பெட்ரோல் தேவை. எனவே, வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது மட்டும் பெட்ரோலை ஊற்றவேண்டும். பைக்கின் ஒருபுறம் 1 லிட்டர் நீருடன் 200 கிராம் உப்பை போட்டு கலந்து வைக்க வேண்டும். அதற்குள் சோலார் பேனலுடன் கூடிய பேட்டரி இணைக்கப்படும். இதன்மூலம் உப்பு கலந்த நீரில் இருந்து ஆக்ஸிஜன் தனியாக பிரிந்து வெளியேறிச் செல்ல, ஹைட்ரஜன் இன்ஜினுக்கு சென்று வாகனத்தை இயக்குகிறது. இந்த பைக்கில் 40 கி.மீ. தூரம் வரை செல்லலாம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement