நடிகர் மாதவன் உடன் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கியதற்கான காரணத்தை பல ஆண்டுகள் கழித்து பேட்டி ஒன்றில் நடிகை பிபாஷா பாசு அளித்து இருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பிபாஷா பாசு. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். இவர் 2001ஆம் ஆண்டிலிருந்து சினிமா துறையில் படங்களில் நடித்து வருகிறார். அதிலும் இவர் 2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சச்சின் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
மாதவன் உடன் பிபாஷா பாசு நடித்த படம்:
இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பின் இதனை தொடர்ந்து பிபாஷா பாசு அவர்கள் தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் மட்டும் தான் நடித்தார் .அதற்கு பிறகு இவர் பாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தினார். மேலும், இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார். இந்த நிலையில் இவர் மாதவனுடன் சேர்ந்து ஜோடி பிரேக்கர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பிபாஷா பாசு அளித்த பேட்டி:
இந்த படம் 2012ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிபாஷா பாசு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் மாதவன் உடன் நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் நடிகர் மாதவன் உடன் சேர்ந்து ஜோடி பிரேக்கர்ஸ் என்ற படத்தில் நடித்து இருந்தேன். இந்த படத்தில் மாதவனுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால், அந்த காட்சியில் நடிக்க எனக்கு ரொம்ப தயக்கமாக இருந்தது.
படத்தில் முத்த காட்சியின் போது நடந்தது:
அதற்கு காரணம் மாதவனின் மனைவி அருகில் இருந்தது தான். அவர் இருக்கும்போது மாதவன் உடன் முத்தக்காட்சியில் நடிக்க எனக்கு தயக்கமாக இருந்தது. பின் மாதவனும், இயக்குனரும் என்னை சமாதனப்படுத்தி நடிக்க வைத்தார்கள். முத்தக்காட்சியில் நடித்த பின்னர் நான் வேகமாக சென்று மேக்கப் ரூமில் பல மணி நேரம் இருந்தேன். ஏன்னா, மாதவனுக்கு முத்தம் கொடுக்கும் போது அவரது வாயிலிருந்து வெங்காய வாசனை வந்தது. அது எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை.
மாதவன் உடன் முத்தக்காட்சியில் நடந்தது:
அதனால் தான் அலர்ஜியாக இருந்தது. அதோடு படப்பிடிப்பிற்கு ஒரு சில நிமிடத்திற்கு முன்னர் தான் மாதவன் அதிக அளவு வெங்காயத்துடன் கூடிய உணவை சாப்பிட்டு இருந்தார். அதனால் தான் எனக்கு ஒத்துக் கொள்ளாமல் அலர்ஜி ஏற்பட்டது என்று கூறி இருக்கிறார். இப்படி பல வருடங்களுக்குப் பின்னர் படத்தில் மாதவன் உடன் முத்தக்காட்சியில் நிகழ்ந்த சில விஷயங்களை பிபாஷா பாசு பகிர்ந்திருக்கிறார். இப்படி இவர் பேசி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மாதவன் திரைப்பயணம்:
ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் சாக்லேட் பாயாக திகழ்ந்தவர் மாதவன். இவர் தமிழ் மொழியில் மட்டும் தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதிலும் சமீப காலமாக மாதவன் அவர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தற்போது இவர் சில படங்களில் நடித்து இருக்கிறார். அந்த படங்கள் எல்லாம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.