இத கொடுக்கவா இவ்ளோ நேரம் நிக்க வச்சீங்க – பா ஜ கவின் நிவாரண பொருளை பார்த்து குஷ்புவிடம் மல்லு கட்டிய மக்கள்.

0
613
kushboo
- Advertisement -

பா ஜ கா சார்பாக மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க சென்ற குஷ்பூவிடம் தொகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா ஜ க சார்பாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போட்டியிட்டார் குஷ்பூ. இத்னால் ஆயிரம் விளக்குப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். ஆனால், இந்த தொகுதியில் போட்டியிட்ட தி மு க வேட்பாளர் எழிலன் 33,044 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் இந்த தொகுதியில் 38,493 வாக்குகளை பெற்றார் குஷ்பூ.

-விளம்பரம்-

இந்த நிலையில் சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள டுமீல் குப்பம் பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க பா ஜ க ஏற்பாடு செய்து இருந்தது. மேலும், இந்த நிவாரண பொருட்களை நடிகையும் அக்கட்சியின் உறிப்பனருமான குஷ்பூ வழங்குவதாக இருந்தது. ஆனால், குஷ்பூ வர தாமதமானதால் கட்சியினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் அப் பகுதி மக்கள்.

இதையும் பாருங்க : சூர்யாவிற்கு அம்மாவை நடித்த சிம்ரன், விஜய்க்கு அம்மாவாக நடிக்க மாட்டாராம் – அதற்கு அவர் சொன்ன காரணம்.

- Advertisement -

மேலும், நிவாரணம் வழங்குவதாக கூறிவிட்டு வெறும் பிரெட், பால் வழங்கியதை பார்த்து கடுப்பான அப்பகுதி மக்கள், இதுக்கா நாங்க இவ்ளோ நேரம் கால்கடுக்க நின்று கொண்டு இருந்தோம் என்று அக்கட்சியனரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் நீண்ட நேரம் கழித்து வந்த குஷ்பூவிடமும் இதை முறையிட்டனர்.

மேலும், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய குஷ்பூ, பசி இருக்கிறவர்களுக்கு தான் ஒரு பிரேட் பாக்கெட் மற்றும் பாலின் அருமை தெரியும் என்று கூறி, கூட்டத்தில் இருக்கும் பெண்களை பார்த்து பிரெட் பால் கொடுத்தது உங்களுக்கு பத்தலையாம்மா என்று கேட்டார். ஆனால், கூட்டத்தில் இருந்த பகுதி மக்களோ ‘இன்னும் கூட நீங்க செய்யணும், ஒரு 5 கிலோ அரசி கொடுத்து இருந்தா கூட 5 நாள் சாப்பிட்டு இருப்போம். இந்த பிரெட் பால் ஒரு நாளைக்கு வருமா’ என்று கூறி பல்ப் கொடுத்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement