கடந்த சில நாட்களாக தவெக தலைவர் விஜய் மற்றும் த்ரிஷா, நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு ஒன்றாக பிளைட்டில் சென்றிருந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. அதனால் நடிகர் விஜய்யையும் த்ரிஷாவையும் பலரும் பல விதமாக கேலி செய்திருந்தார்கள். மேலும், அவர்கள் அந்தத் திருமணத்திற்கு செல்வதற்கு பாஜகவை சேர்ந்த ஒருவர்தான் விமானத்தை தயார் செய்து கொடுத்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது.

தற்போது இந்த விஷயம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார்கள். அதில், விஜய் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் சென்ற வாரம் கோவாவில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றார். அவர் விமான நிலையத்தில் கேட் நம்பர் 6ல் சோதனைக்கு உட்படுத்திக் கொண்டு ஒரு தனியார் விமானத்தில் பயணித்தார். அவருடைய பிரைவேட் போட்டோ எப்படி வெளியே வந்தது.
அண்ணாமலை சொன்னது:
மேலும், விஜய் யாருடன் வேண்டுமானாலும் போகலாம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். விஜய்யுடனும் யார் வேண்டுமானாலும் போகலாம். அதுவும் அவர்கள் விருப்பம். அந்த போட்டோவை வெளியிட்டது யார்? . அதற்காக தான் நாங்கள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதித்திராய இந்தியாவிற்கு ஒரு கடிதம் எழுத இருக்கின்றோம். அந்தப் போட்டோவை எடுத்தது யார்? வருவோர் போரை எல்லாம் போட்டோ எடுப்பது தான் ஸ்டேட் இன்டலிஜன்ஸ் வேலையா? அந்த போட்டோக்களை திமுக ஐடி விங்கிற்கு அனுப்பியது யார்.
https://www.youtube.com/watch?v=ye16YAPxcVY
திமுக குறித்து:
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச யாருக்குமே இங்கு தகுதி கிடையாது. அவர் தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக பேசினால் கூட, அந்தக் கட்சியின் மாநில தலைவராக இதைச் சொல்கிறேன். இதுதான் நீங்கள் காட்டும் அரசியல் நாகரீகமா. இதுதான் திமுக மக்களை மதிக்கும் விதமா. யாரு எங்க போனாலும் போட்டோ எடுப்பீங்க. கல்யாணத்துக்கு போனா கூட போட்டோ எடுத்து லீக் பண்ணுவீங்க. இதனால்தான் விமானத் துறைக்கு கடிதம் அனுப்பி சிசிடிவி கேமராக்களை சோதனை இட சொல்ல இருக்கிறோம்.
விஜய்க்கு சொன்ன அட்வைஸ்:
முதலில் யாரு போட்டோவை எடுத்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பின் அவர் அந்த போட்டோவை யாருக்கு அனுப்பினார் என்பதை விசாரித்து எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இனி அரசியலை உன்னிப்பாக பார்க்க வேண்டும். இத்தனை நாள் சினிமாவில் பிஸியாக இருந்திருக்கலாம். அதனால் 10 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகளை அவர் பார்த்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு 10 ஆண்டுகளாக அம்பேத்கர் சொன்னது போல ஆட்சி செய்தவர்.

அம்பேத்கரை தான் பின் தொடர்கிறோம்:
அதனால், எந்த இடத்தில் அம்பேத்கர் கொள்கைக்கு எதிராக பாஜக நடந்து கொண்டது என்பதை சரியாக பட்டியலிட்டு சொல்ல வேண்டும். வாய்கிழிய ட்வீட் போடும் உதயநிதி, ஒரு விஷயத்தை யாவது எடுத்துக் கூறி இருக்க வேண்டும் அதேபோல் அம்பேத்கர் கொண்டு வந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் 'ஒரே நாடு ஒரே தேர்தல் முறை' இருக்கிறது அதைத்தான் நாங்கள் திரும்பக் கொண்டு வருகிறோம். ஆனால், அது எப்படி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கும். படித்த அரசியல்வாதிகள், பலமுறை தேர்தலில் வென்றவர்கள், விஜய் உட்பட அனைவரும் பாஜகவிடம் குறை இருந்தால் அதை சுட்டிக் காட்ட வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.






