ஜெய் பீம்காவது கொஞ்சம் நாள் கழிச்சி தான் பிரச்சன வந்துச்சி. வந்த இரண்டாம் நாளே சர்ச்சையில் சிக்கிய மாநாடு.

0
278
maanaadu
- Advertisement -

ஜெய்பீம் படத்தை தொடர்ந்து மாநாடு படத்திலும் புதிதாக எழுந்து இருக்கும் சர்ச்சை. தற்போது இது குறித்து சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த ஜெய்பீம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் ஜெய் பீம் படம் குறித்தும், நடிகர் சூர்யா குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தது. மேலும், சில தினங்களாக தான் ஜெய் பீம் படத்தின் அதிர்வலைகள் கொஞ்சம் தளர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் மாநாடு படத்தின் பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Stimulat-Violent--maanadu-film-should-be-banned-BJP-Vellore-Ibrahim

பல போராட்டங்கள், பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருந்தார். சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மாநாடு படம் மதக்கலவரத்தை ஏற்படுத்துகிறது என்று சோசியல் மீடியாவில் ஒரு புது சர்ச்சை எழுந்திருக்கிறது.

இதையும் பாருங்க : தமிழனாக பிறக்கனும், சென்னையில தண்ணீல மிதக்கனும் – மன்சூர் அலிகானின் வைரல் வீடியோ

- Advertisement -

மாநாடு படத்தில் சிம்பு அவர்கள் முஸ்ஸிம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் அமெரிக்காவில் குண்டு வீசினால் தீவிரவாதி. இந்தியா என்றால் முஸ்லிம் தீவிரவாதி. தீவிரவாதிக்கு ஏது ஜாதி, மதம் என்று வசனம் வருகிறது. கடைசி காட்சியில் ரயில்வே நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அளிக்கப்பட்டிருக்கும் பெயர் பலகை காட்டுகிறார்கள். இந்நிலையில் மாநில பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியது, சிம்புவின் மாநாடு படம் இந்து — முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் விவகாரத்தில் முதல் அமைச்சர் தலையீட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், ஜெய் பீம் படம் வெளியாகி பல வாரங்கள் கழித்து தான் இந்தப் பிரச்சினை வெடித்தது. ஆனால், மாநாடு படம் வெளியாகி மறுநாளே பல சர்ச்சைகளும், சில அமைப்புகள் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள். மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனாலும் இந்த சர்ச்சைகளுக்கு படக்குழுவினர் என்ன பதிலளிக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும், இந்தக் குற்றச்சாட்டிற்கு சிம்புவும், அவருடைய தந்தையும் என்ன பதிலளிக்கப் போகிறார்கள்? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement