-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

நான்கு நபர்களில் ஒரு தலித்தும் அடங்கும் – Mp நியமன அறிக்கையில் இளையராஜாவின் சாதியை குறிப்பிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு.

0
440
ilayaraja

இளையராஜாவை வாழ்த்தி பாஜக பதிவிட்டிற்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். இவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர். 1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் பாடல் வரிகளை எழுதுபவர் என்று பலருக்கும் தெரியாத ஒன்று.

இளையராஜா வாங்கிய விருது:

மேலும், இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இதனால் இவருக்கு இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இவர் நான்கு முறை இவர் பெற்று இருக்கிறார்.

மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா:

-விளம்பரம்-

மேலும், இவர் சில வருடங்களாகவே இசைக்கச்சேரிகள் நடத்துவதில் அதிக ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த அக்கா குருவி படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.அதோடு இவர் பல படங்களில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசை அமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் முன்னாள் தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இளையராஜா குறித்து மோடி போட்ட பதிவு:

இந்நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, சாதாரணப் பின்னணியிலிருந்து வந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார் இளையராஜா. இசையின் மூலம் மனித உணர்வுகளை அழகாய் பிரதிபலித்தவர். அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, மோடி அரசாங்கம் பல்வேறு துறைகளில் தலைசிறந்த இந்தியர்களை தேர்வு செய்து நியமனம் உறுப்பினர்களாக அறிவித்துள்ளது.

பாஜக போட்ட டீவ்ட்:

அதில் இசையமைப்பாளர் இளையராஜா ஒருவர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தவர் இளையராஜா. தனது பணியின் போது எண்ணிலடங்காத தடைகளையும், ஜாதி அடிப்படை ஒடுக்குமுறைகளையும் சந்தித்தவர். அனைத்து கஷ்டங்களையும் கடந்து தலை சிறந்த இசை அமைப்பாளர் இளையராஜா. தனது இசை பணிக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். தடைகளை கடந்து சாதிக்க வேண்டும் என்பதற்கு இளையராஜாவின் வாழ்க்கை ஒரு முன் மாதிரியாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அதிருப்தி :

அதே போல BJP வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றிலும் கூட ஒரு தலித் மற்றும் ஜெயின் சாதியை சேர்ந்தவர்களை தேர்வு செய்து இருக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் பெரும் கொந்தளிப்பில் ஆழ்ந்து உள்ளனர். இதனால் ஒரு சில ரசிகர்கள், உங்கள நாங்கள் இசைஞானி என்று தான் அழைத்து வருகிறோம். ஆனால், உங்களை தலித் என்று அடையாளப்படுத்தி இருக்கிறாரகள் என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news