நான் சாமி 2 எடுக்கல சாமி² தான் எடுத்தேன் – ஹரி சொன்ன புதிய தகவல். சாமி 2 கதை இது தானாம். வீடியோ இதோ.

0
543
vikram
- Advertisement -

தான் சாமி 2 எடுக்கவில்லை சாமி² தான் எடுத்தேன் என்று இயக்குனர் ஹரி கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர் லிஸ்டில் இயக்குனர் ஹரிக்கு நிச்சயம் ஒரு தனி இடம் இருக்கிறது. இவர் இயக்கிய சாமி, கோவில், ஆறு, சிங்கம் போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. ஆனால், சமீப காலமாக இவர் இயக்கிய ஒரு சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும், சிங்கம் படத்தை மூன்று பாகங்கள் இயக்கிய இருக்கிறார். அதே பாணியில் இறுதியாக 2018 ஆம் ஆண்டு சாமி² படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், முதல் பாகம் அளவிற்கு இந்த படம் வெற்றி பெறவில்லை. 2003ஆம் ஆண்டு வெளிவந்த படம் சாமி. இந்த படத்தில் திரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா, விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹரி அவர்கள் மீண்டும் 2018ஆம் ஆண்டு சாமி 2 என்று இரண்டாம் பாகத்தை வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : பல கோடி தங்கம் மற்றும் வைர நகைகள், கோபாலபுரத்து வீடு – பிரபு,ராம் குமார் மீது சகோதரிகள் தொடர்ந்த வழக்கு. விவரம் இதோ.

தோல்வியை தழுவிய சாமி² :

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, சூரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த இரண்டாம் பாகத்தில் ஆறுச்சாமி என் மகன் ராமசாமி தன் பெற்றோர்களை கொன்ற பிச்சை பெருமாளின் மகன்களை பழிவாங்கும் கதை. மேலும், இந்த படமும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் தோல்விப்படமாக அமைந்த்து. மேலும், இந்த படம் வெளியான போது அதிக கேலிக்கும் உள்ளாகி இருந்தது.

-விளம்பரம்-

சாமியின் அடுத்த ஜெனரேஷனாக எடுத்தேன் :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஹரி, தான் சாமி 2வை எடுக்கவில்லை என்றும் தான் இயக்கியது சாமி² தான் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘சாமியின் வேட்டை தொடரும் என்று போட்டதற்கு வேறு காரணம் இருக்கிறது சாமியின் மிஷின் 2 தான் அது முற்றிலும் வேறு கதை அதை இன்னும் நான் பண்ணவே இல்லை. அது வைடிங்கில் இருக்கிறது. சாமி படத்திற்கு பின்னர் நீண்ட இடைவேளை ஏற்பட்டு விட்டதால் அதை செய்ய முடியாது என்பதால் அடுத்த மெஷினாக இல்லாமல் அடுத்த ஜெனரேஷனாக எடுக்கலாம் என்று எடுத்தது தான் அந்த கதை’

சாமி 2 பண்ண முடியாது :

எப்படி சாமி படத்தில் வந்த வில்லனுக்கு ஒரு மகன் இருக்கிறார் என்ற ஒரு பின் கதை இருக்கிறதோ அதேபோலத்தான் சாமிக்கு ஒரு மகன் இருக்கிறார் என்று எடுக்கப்பட்ட ஒரு பின் கதை தான் சாமி². ஒரிஜினல் சாமி பார்ட் 2 என்பது முற்றிலும் வேறு, அந்த படம் குறித்து விக்ரம் சாரிடம் ஒரு முறை நான் சொன்னேன். ஆனால், அந்த படத்தை இப்போது பண்ண முடியாது. அந்த படத்தை எடுத்தால் அது ஒரு OTT கன்டென்ட் மாதிரி போகும். அந்த படத்தை மிகவும் சுருக்கி பண்ண முடியாது, அதை இழுத்து பண்ணால் தான் ராவாக இருக்கும். அந்த கதை ஹீரோவை திணறுவது போல இருக்கும் ஸ்ட்ராங்காக இருக்கும் என்று கூறியுள்ளார்.

யானை திரைப்படம் :

சாமி² படத்திற்கு பின்னர் இயக்குனர் ஹரி எந்த படத்தையும் இயக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் 4 ஆண்டுகள் கழித்து யானை படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கி இருந்தார். இந்த படத்தின் ஹரியின் மச்சன் அருண் விஜய் தான் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் ராஜேஷ், ராதிகா, பிரியா பவானி ஷங்கர், சமுத்திரகனி என்று பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படம் கமர்ஷியல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது.

Advertisement