‘சாதுமிரண்டா காடு கொள்ளாது’ – எப்படி இருக்கிறது MS பாஸ்கரின் ‘அக்கரன்’ – முழு விமர்சனம் இதோ

0
258
MSbaskar
- Advertisement -

அறிமுக இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அக்கரன். இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், வெண்பா, கபாலி விஸ்வநாத், பிரியதர்ஷினி,நமோ நாராயணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சமூக விழிப்புணர்வு கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் மதுரையில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரொம்ப வெள்ளந்தியானவர். இவருக்கு தேவி, பிரியா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் இளைய மகள் பிரியா நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகளுக்கு சென்று கொண்டிருக்கின்றார். இப்படி இருக்கும்போது ஒரு நாள் வகுப்புகள் முடிந்து விட்டு ப்ரியா வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதறிப்போன வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

பின் போலீஸ் புகாரை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இதனால் வீரபாண்டி தன்னுடைய மகளை தனியாகவே தேடுகிறார். இறுதியில் வீரபாண்டி தன்னுடைய மகளை கண்டுபிடித்தாரா? வீரபாண்டி மகளுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் வீரபாண்டி கதாபாத்திரத்தில் எம்.எஸ். பாஸ்கர் மிரட்டி இருக்கிறார். இவருடைய மகள்களாக வெண்பா, பிரியதர்ஷினி நடித்திருக்கிறார்கள்.

நீட் தேர்வு, உள்ளூர் அரசியல், அதிகார வேட்டை ஆகியவற்றைக் கொண்டு கிரைம் த்ரில்லர் பாணியில் இயக்குனர் கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது. சாதுமிரண்டா காடு கொள்ளாது என்ற அளவிற்கு எம் எஸ் பாஸ்கர் நடிப்பு இருக்கிறது. இவரை அடுத்து படத்தில் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால், சில காட்சிகள் யூகிக்கும் அளவிற்கு இருப்பது தான் படத்திற்கு குறையாக இருக்கிறது.

-விளம்பரம்-

நீட் தேர்வு குறித்து எடுத்து சொல்லப்படும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. படம் முழுவதையும் எம் எஸ் பாஸ்கர் தாங்கி சென்றிருக்கிறார். அறிமுக இயக்குனராக இருந்தாலும் கதையை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். மொத்தத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவான அக்கரன் படம் சுமாராக இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

கதைக்களம் நன்றாக இருக்கிறது

எம் எஸ் பாஸ்கர் நடிப்பு சிறப்பு

சமூகத்திற்கு ஒரு மெசேஜ்

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

யூகிக்க கூடிய அளவிற்கு சில காட்சிகள் இருக்கிறது

பிரபலமான நடிகர்களை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

மொத்தத்தில் அக்கரன் – விழிப்புணர்வு

Advertisement