குளியல் துண்டுகள் மற்றும் தலையணைகளிலும் ரத்தக் கறைகள் – ஷேன் வார்ன் இறப்பு குறித்து தாய்லாந்து போலீஸ் தகவல்.

0
373
shane
- Advertisement -

ஷேன் வார்ன் இறப்பு குறித்து விசாரித்த தாய்லாந்து போலீஸ் வெளியிட்டு உள்ள அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்ன் 1992 ஆம் ஆண்டு தான் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமானார். பின் இவர் 145 டெஸ்ட் போட்டிகளிலும் 194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். மேலும், ஷேன் வார்ன் சர்வதேச கிரிக்கெட்டில் 1001 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு மட்டுமின்றி ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை கைப்பற்றிய போதும் 20 ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்சி செய்கையிலும் அந்த அணியின் கிரிக்கெட்டில் வீரராக வலம் வந்தார்.

-விளம்பரம்-

கிட்டத்தட்ட ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு தூணாக செயல்பட்டார். அதேபோன்று ஐபிஎல் வரலாற்றிலும் இவருக்கு என தனி இடம் உள்ளது. இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஷேன் வார்ன்க்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன் திடீரென அகால மரணம் அடைந்துள்ளார் என்ற செய்தி வெளியானதும் ரசிகர்கள் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளனர். தற்போது அவருக்கு 52 வயதாகிறது.

- Advertisement -

தாய்லாந்துக்கு சென்ற ஷேன் வார்ன்:

தாய்லாந்து நாட்டில் உள்ள வயதான பங்களாவில் இறந்தபடி கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கார்டியாக் அரெஸ்ட் அதாவது ஹார்ட் அட்டாக் மூலம் தான் உயிரிழந்திருக்கிறார் என்று உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. வார்ன் தாய்லாந்துக்கு 3 மாத ஓய்வுக்காக சென்றிருந்தார். ஷேன் வார்னுக்கு தாய்லாந்தின் கோஹ் சாமுய் (Koh Samui) பகுதியில் வில்லா ஒன்று உள்ளது.

வார்னின் கடைசி நிமிடங்கள்:

இங்கு தனது மூன்று நண்பர்களுடன் விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளார். பின் வார்னின் நெருங்கிய நண்பராகவும், உதவியாளராகவும் அறியப்படும் ஆண்ட்ரூ நியோபிடோவ் (Andrew Neophitou) என்பவர் தான் கடைசி நிமிடங்களில் அவருக்கு முதலுதவி செய்துள்ளார். ஆனால், அவரின் முயற்சிகள் அனைத்தும் வீணாகி உள்ளது. தற்போது தாய்லாந்து மருத்துவமனையில் வார்னின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே வார்னின் விலாவில் சோதனையிட்டு விசாரணை நடத்தியது தாய்லாந்து போலீஸ். விசாரணையில் போலீசார் கூறியிருப்பது,

-விளம்பரம்-

போலீஸ் விசாரணையில் கூறி இருப்பது:

எங்கள் சோதனையின் போது தரையிலும், குளியல் துண்டுகள் மற்றும் தலையணைகளிலும் ரத்தக் கறைகள் காணப்பட்டது. அவரது நண்பர்கள் சிபிஆர் சிகிச்சை அளித்த போது இருமல் மற்றும் ரத்தப் போக்கு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு அவரின் நண்பர் சிகிச்சை அளித்துள்ளார். 20 நிமிடங்கள் வரை அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை. ஆனால், உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை. பின் எங்கள் விசாரணையின் அடிப்படையில் சம்பவ இடத்தில் எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது. அவருக்கு ஆஸ்துமா மற்றும் இதய பிரச்சனைகள் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. போதைப் பொருள் உபயோ தடயங்களும் இல்லை என்று கூறி இருந்தார்.

வார்னிங் கடைசி நிமிடங்கள் குறித்து அவரின் மேலாளர் கூறியிருப்பது:

அதுமட்டுமில்லாமல் இதுதொடர்பாக வார்னிங் கடைசி நிமிடங்கள் குறித்து அவரின் மேலாளர் கூறியிருப்பது, எப்போதும் மாலை 5 மணிக்கு மது அருந்த செல்வது அவருடைய வழக்கம். எப்போதும் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பார். ஆனால், அன்று நேரமாகியும் அவர் வரவில்லை. ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்த நண்பர்கள் வார்னின் அறையின் கதவை திறந்து உள்ளே போனோம். உணர்வில்லாமல் அவர் கிடந்தார். உடனே நண்பர் ஒருவர் சிபிஆர் முதல் உதவி செய்தார். ஆம்புலன்ஸ் வந்த பின் அவர்களும் 10- 20 நிமிடங்கள் சிபிஆர் உதவி சிகிச்சை செய்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement