ரஜினி, அஜித்தை லெஜெண்ட் படத்துடன் ஒப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட் – அண்டி இந்தியன் லட்சணத்தை சொன்ன திரையரங்க உரிமையாளர்.

0
469
legand
- Advertisement -

ப்ளூ சட்டை மாறானை தியேட்டர் ஓனர் கேவலப்படுத்தி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.

- Advertisement -

ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்த ரசிகர்கள்:

அதிலும் அஜித்தின் வலிமை படத்தை குறித்து இவர் தாறுமாறாக பேசி இருந்ததால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொந்தளித்து ப்ளூ சட்டை மாறனை திட்டி இருந்தார்கள். இதற்கு இடையில் இவர் ஒரு படம் ஒன்று எடுத்து இருந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக தான் பணிபுரிந்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இப்படி ஒரு நிலையில் இவர் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் போட்ட போஸ்ட்:

பல சர்ச்சைகளுக்கு பின் வெளியான இந்த படம் சரியாக ஓடவில்லை. இதில் அவரே நடித்திருந்தார். இதனால் இந்த படம் வந்த வேகத்திலேயே காணாமல் போனது என்று சொல்லலாம். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் மீண்டும் ஒரு போஸ்ட் போட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது வலிமை, அண்ணாத்த படங்களின் ட்ரெய்லர் பார்வையாளர்களை விட லெஜெண்ட் சரவணா படத்தின் டிரைலர் பார்வையாளர்கள் தான் அதிகம் என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

தியேட்டர் உரிமையாளர் டீவ்ட்:

இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ப்ளூ சட்டை மாறனை தாறுமாறாக திட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு தியேட்டர் உரிமையாளர் இது தொடர்பாக டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், உங்கள் ஆன்டி இந்தியன் படம் எங்கள் தியேட்டரில் 2 சோ தான் ஒடி இருந்தது. இரண்டையும் சேர்த்து மொத்தம் 17 பேர் தான் பார்த்தனர். பின்னர் மூன்றாவது ஷோவில் வேறு படத்தை மாற்றி விட்டோம். அண்ணாச்சி படம் உங்கள் படம் மாதிரி இருக்காது என்று நம்புகிறோம் என பதிவிட்டு இருந்தார்.

வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்:

இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த அவமானம் தேவையா? நீ எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டா? என்றெல்லாம் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அதிலும் சிலர், ஆன்ட்டி இந்தியன் மாதிரி குப்பை படத்தை எடுத்துவிட்டு நீங்கள் மற்ற படங்களை குப்பை என்று சொல்கிறீர்களே? உங்களுக்கெல்லாம் மற்ற படங்களைப் பற்றி பேச அருகதை கிடையாது என்றெல்லாம் வறுத்து எடுத்து வருகின்றனர்.

Advertisement