ஏ ஆர் ரகுமானுக்கு ஆதரவாக தங்கர் பச்சன் பதிவிட்ட பதிவை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறதுற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி குறித்த சர்ச்சை தான். தமிழகம் முழுவதும் இந்த சர்ச்சை பூதாகரம்பாக வெடித்து கொண்டு வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார்.
அதோடு இவர் நிகழ்ச்சி என்றாலே டிக்கெட் சில நிமிடங்களில் விற்பனையாகி விடும். இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள். அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருந்தது. ஆனால், திடீர் மழை பெய்து நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் நீர் தேங்கி இருந்தது. இதனால் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி:
மேலும், இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மானும் சமூக வலைத்தளங்களில் மன்னிக்கவும் கேட்டிருந்தார். தற்போது அந்த இசை கச்சேரி ஞாயிற்று கிழமை நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் மக்கள் அவதிப்பட்டனர். பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 10000 ரூபாய் டிக்கெட் வாங்கி தங்களால் உள்ளே கூட செல்லவில்லை என்று பலரும் புலம்பி இருக்கின்றனர்.
ரஹ்மான் சொன்னது பொய்யா? இவர் சொல்றது பொய்யா?
— Blue Sattai Maran (@tamiltalkies) September 12, 2023
இத கேட்டா..வன்மத்த கக்கறோம், பன் பட்டர் ஜாமை நக்கறோம்னு கொம்பு சுத்த வருவாங்க.
ஒரே தமாசுதான் போங்க. pic.twitter.com/FbOF5wKO6o
நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்:
ஏ ஆர் ரகுமான் மிகப்பெரிய ஸ்கேம் செய்துவிட்டார். அவர் மோசடி மன்னன் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் அவரை விமர்சித்து வருகின்றனர். ஆனால், சிலர் ஏ ஆர் ரகுமானுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் தங்கர்பச்சன் இசையமைப்பாளர் ரகுமானுக்கு ஆதரவாக பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியால் மக்கள் கோபப்பட்டு பொங்கி எழுவதை காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பிரச்சனை வந்தால் மட்டுமே பொங்கி எழும்பும் மக்கள்பொதுமக்களின் நலனுக்காக போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும்.
தங்கர்பச்சான் பதிவு:
இந்த கோவத்தை எல்லா விஷயத்துக்கும் காண்பித்தால் நாம் அரசியல் கட்சிகளை நம்ப வேண்டிய அவசியமே இல்லை. இது போன்ற நிகழ்வுகளை ஊடகங்கள் மக்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விடுகின்றது. மக்களும் பொதுநல சிந்தனையில்லாமல் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடுகின்றனர். மக்களும் ஊடகங்களும் மனது வைத்தால் மட்டுமே அனைத்து மாற்றங்களும் நிகழும். அதுவரை வெறும் புலம்பியே தான் மக்கள் வாழ முடியும் என்று கூறி இருக்கிறார். தற்போது இவரின் பதிவு இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் பதில்கொடுத்து இருக்கிறார். அதில் அவர், மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி கொடுமைகள் குறித்து பல்வேறு வீடியோக்கள் ஆதாரத்துடன் வெளிவந்திருக்கின்றது.
'மறக்குமா நெஞ்சம்' கொடுமைகள் பற்றி பல்வேறு வீடியோக்கள் ஆதாரத்துடன் வெளிவந்தன. பெண்கள், முதியவர்கள் உட்பட பலரும் தாங்கள் கடும் இன்னலுக்கு ஆளானதை கூறினர்.
— Blue Sattai Maran (@tamiltalkies) September 12, 2023
ஆனால் திரைத்துறையை சார்ந்த சிலர் அதைப்பற்றி பேசாமல் ரஹ்மானுக்கு கூஜா தூக்குகிறார்கள். இதை அவரே விரும்ப மாட்டார். தவறுக்கு… https://t.co/RFivGM8gn1
ப்ளூ சட்டை மாறன் பதிவு:
பெண்கள் முதியவர்கள் என பலருமே கடுமையாக தாக்கப்பட்டு பல பிரச்சினைகளை எதிர் கொண்டும் இருக்கின்றனர். ஆனால், திரைத்துறையை சேர்ந்த சிலர் அதைப்பற்றி பேசாமல் ரகுமானுக்கு கூஜா தூக்குகிறார்கள். இதை அவரே விரும்ப மாட்டார். தவறுக்கு தானும் பொறுப்பு என அவர் ஏற்கனவே கூறிவிட்டார். நீங்கள் ஏன் முரட்டு முட்டு தருகிறீர்கள்? இப்படி பேசினால் அவர் உங்கள் படத்தில் இசையமைப்பாளர் என ஏதேனும் கணக்கு போடுகிறீர்களா? ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற போராட்டங்களில் பங்கேற்றது அமேசான் வாழ் அரிய வகை மக்களா? அல்லது நிலாவில் வாழும் குடிமக்களா? தமிழர்கள் தானே? நீங்கள் மக்களுக்காக எத்தனை போராட்டங்கள் நடத்தி தீர்வினை பெற்று தந்துள்ளீர்கள்? பெரும்பாலும் ஏசி அறையில் மைக் முன்பு பொங்குவதோடு சரி. இதனால் தான் பல ஆண்டுகளாக உங்கள் படங்கள் மக்கள் புறக்கணித்து வருகிறார்கள். உங்கள் வீராவேச உபதேசங்களை நீங்களே வைத்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசாதவர்களின் படங்களை பார்க்காமல் ஒதுக்கித் தள்ளுங்கள் மக்களே என்று கூறியிருக்கிறார்.