சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.
சமீபத்தில் அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி தன்னுடைய முகநூல் பக்கத்தில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான நாக சைதன்யாவின் ‘லவ் ஸ்டோரி’ படம் குறித்தும் அதற்கு வந்த விமர்சனங்கள் குறித்தும் பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்ட அந்த பதிவில் லவ் ஸ்டோரி என்ற படத்தை சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு முதல் கடைசி நிலை நடிகர் நடிகைகள் வரை கொண்டாடி இருக்கிறார்கள்.
இதையும் பாருங்க : மார்க் கம்மியா எடுத்ததால என் குடும்பத்திலும் ஒரு தற்கொலை நடந்துச்சு – சாய் பல்லவி கொடுத்த ஷாக்.
ஒரு படம் நன்றாக இருந்தாலும் ரசிகர்கள் என்ற போர்வையிலும் சினிமா விமர்சனம் சொல்கிறேன் என்ற பெயரிலும் சில காலிப் பயல்கள் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிக்க தேவையற்ற விமர்சனங்களால் கிழித்து தொங்க விடாமல் இப்படி பாராட்டுவது சினிமாவிற்கு ஒரு ஆரோக்கியமான செய்தியாக இருக்கும்.
களைகளை வேரறுத்து சகோதரத்துவத்தை வளர்ப்போம் தமிழ் சினிமாவை கொண்டாடுவோம் ஒருவர் வீழ்ச்சியில் இன்னொருவர் வாழ்ந்திட முடியாது என்று பதிவிட்டிருந்தார். ஷண்முகம் முத்துசாமியின் இந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன்(தமிழில் தெய்வதிருமகள் படத்தை தயாரித்தவர். மேலும், UTV மோஷன் பிக்சர்ஸ் பேனரில் பல படங்களை தயாரித்தவர்)
‘அடங்காதே’ திரைப்பட இயக்குனர் சண்முகம் முத்துசாமி அவர்களின் பதிவு. தெலுங்கு சினிமாவில் இருக்கும் ஒற்றுமை தமிழ் சினிமாவில் வர வேண்டும். திரைப்படங்களை விமர்சனம் செய்கிறேன் என்ற பேரில் தமிழ் சினிமாவை ஒழிக்க நினைப்பவர்கள்/ரசிகர்களை திரையரங்கு வர விடாமல் செய்பவர்கள் மாற வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.
இவர்கள் இருவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் ‘காலிப்பயல்களை கலாய்த்து குளிர் ஜுரத்தில் நடுங்க வைத்த நபருக்கும், இதை ரீ ட்வீட் செய்து சமூக விழிப்புணர்வு தந்து அசத்தியுள்ள மாண்புமிகு.டாக்டர் தனஞ்செயன் அவர்களுக்கும் பேரன்பும், பெரிய வணக்கமும். தொடர்ந்து கலாய்த்து தள்ள வாழ்த்துகள். இன்னும் நிறைய வேடிக்கையான சம்பவங்களாக காத்துகொண்டு இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.