என்னது ப்ளூ சட்டை விமர்சனத்தால் தான் அஜித் உடலை குறைக்க முடிவெடுத்தாரா ? இது என்னடா புது உருட்டா இருக்கு.

0
696
bluesattai
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த 24 ஆம் தேதி வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை விமர்சனம் செய்து இருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார் இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

ப்ளூ சட்டை வலிமை விமர்சனம் :

இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது. மேலும், இந்த படம் ரசிகர்களின் 3 வருட காத்திருப்பை ஓரளவிற்கு பூர்த்தி செய்து இருந்தாலும் ஜென்ரல் ஆடியன்ஸை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கும் விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் அஜித்தை உருவக்கேலி செய்து இருந்தார்.

Ak61ல் உடல் எடை குறைக்கும் அஜித் :

இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் இவர் இந்த படத்தில் அஜித் ஷேவிங் எல்லாம் செய்துவிட்டு பஜன் லால் சேட் போல இருக்கிறார் என்றும், மூஞ்சில் தொப்பையை வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடவே கஷ்டப்படுகிறார் என்றும் விமர்சனம் செய்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய அடுத்தப்படத்துக்கு அஜித் 25 கிலோ உடல் எடை குறைப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
Image

வெளியான லேட்டஸ்ட் லுக் :

வலிமை படத்தை தொடர்ந்து தற்போது அஜித் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது. அதே போல இந்த படத்திற்காக அஜித் 25 கிலோ குறைக்க இருக்கிறார் என்றும் ஏற்கனவே உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ள அஜித் 10 கிலோ குறைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்காகவே தனி பயிற்சியாளரை அஜித் நியமித்திருக்கிறார்.

ஆக்கபூர்வமான விமர்சனத்தின் விளைவு

இந்த நிலையில் இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், இறுதியாக நம் அனைவர்க்கும் தேவையான ஒரு நல்ல செய்தி என்று பதிவிட்டுள்ளார். மேலும், மாறன் கேலி செய்ததால் தான் அஜித் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று பலர் கமண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒரு கமெண்டை பகிர்ந்துள்ள மாறன், ஆக்கபூர்வமான விமர்சனத்தின் விளைவு. முதிர்ச்சியடைந்த மக்கள் அதைப் புரிந்துகொண்டு நேர்மையான பதில்களை அளித்தனர். நன்றி. சுண்டக்காய் பிரபலங்களே.. கடின உழைப்பால் உங்கள் சொந்த பாதையை உருவாக்க முயற்சி செய்யுங்கள். முட்டாள்தனமான லாபத்திற்காக சோம்பு தூக்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளர்.

Advertisement