எடுத்தது ஒரே படம் அதுக்கு இவ்ளோ பிரச்சனையா ? போலீசில் புகார் அளித்த மாறன். என்ன காரணம் பாருங்க.

0
545
bluesattai
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். ப்ளூ சட்டை மாறன் படத்தை இயக்கும் எண்ணத்துடன் தான் சினிமா துறைக்கு வந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இப்படி ஒரு நிலையில் இவர் ‘ஆன்டி இந்தியன்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

இதையும் பாருங்க : ட்பின் போர்வையில் எல்லை மீறுகிறாரா ? குறும்படம் போட்டு கேள்வி கேட்கும் நெட்டிசன்கள். பவானி சொன்னது உண்மையோ ?

- Advertisement -

பல சர்ச்சைகளுக்கு பின் வெளியான இந்த படம் சுமாரான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆன்டி இந்தியன் திரைப்படம் ஓடிய தியேட்டரில் ரகளை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாறன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், மூன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதம்பாவா என்பவரின் தயாரிப்பில் ஆண்டி இண்டியன் என்ற படத்தை இயக்கி உள்ளேன். படம் வெளியாகி 240 தியேட்டர்களில் ஓடுகிறது.

முறையாக தணிக்கை செய்து, படத்தை வெளியிட்டுள்ளோம். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஆண்டி இண்டியன் படத்தை திரையிடக் கூடாது என 10 க்கும் மேற்பட்ட நபர்கள் நேற்று முந்தினம் இரவு தகராறு செய்துள்ளனர். தங்களை தேசி கட்சி பிரதிநிதிகள் என்றும் கூறியுள்ளனர். எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் நபர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார் மாறன்.

-விளம்பரம்-
Advertisement