பல வருஷ உழைப்பை ஆறு நிமிச வீடியோவில் முடித்த ப்ளூ சட்டை – அவரின் ஆடுஜீவதிம் விமர்சனம்

0
242
- Advertisement -

நீண்ட வருடங்களாக போராடி எடுக்கப்பட்ட ஆடு ஜீவிதம் படம் குறித்து தன்னுடைய பாணியில் படத்திற்கு எதிரான Review கொடுத்து இருந்தார். மலையாள சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் பிரித்திவிராஜ். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் நடித்து இருக்கிறார். தமிழிலும் இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் ஆடு ஜீவிதம். இயக்குனர் பிளஸ்ஸி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அமலா பால், கோகுல், Jimmy Jean-Louis உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த திரைப்படத்தில் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் மிகப் படுத்தாமல் அந்த கதைக்கு கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சரியான நடிகர்களை தேர்வு செய்து இருந்தார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தின் ஹீரோ மிகவும் அற்புதமாக கதை உணர்ந்து நடித்திருந்தார். எந்த ஒரு இடத்திலும் ஓவர் ஆக்டிங் செய்யாமல் சரியாக அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இந்தப் படத்தில் வந்த ஆடு கூட சிறப்பாகவே நடத்தி இருந்தது.

- Advertisement -

வழக்கம் போல் பாலைவனம் கதை என்பதால் இங்கு ராஜஸ்தானில் அல்லது CG செய்து எடுப்பார்கள் என்று பார்த்தால் அவ்வாறு எடுக்காமல் சிறப்பாக வெளிநாடுகளில் ஜோர்டான் போன்ற நாடுகளில் சென்று படத்தை எடுத்து இருக்கின்றார்கள். இது படத்திற்கு ஒரு சிறப்பான அமைந்தது. படத்தில் பிரச்சனை என்னவென்றால் ஹீரோ ஆடு மேய்க்கும் இடத்தில் மாட்டிக் கொண்டு அங்கு மிகவும் சிரமப்படுகிறார் அங்கு ஏற்படும் பிரச்சினைகளை அந்த காட்சி வழியாகவே நாம் பார்த்திருந்தால் அந்த வலி நமக்கு உணர்ந்திருக்கும்.

ஆனால் இதில் ஹீரோ வந்து நேரத்தில் இருந்து புலம்பிக்கொண்டே இருக்கும் போது காட்சி அமைப்புகள் இருந்தது. அதனால் அவருடன் இணைந்து நம்மால் படத்தில் தொடர்ந்து முடியவில்லை. எந்த படத்தை நான் லீனியரில் எடுத்துச் சொல்லாமல் லீனியரில் எடுத்துச் சென்று இருந்தால் அந்த வழி நமக்கு புரிந்து இருக்கும். ஹீரோ எவ்வாறு கஷ்டப்பட்டார் என்பதை ஒவ்வொரு காட்சிகளை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் படம் முழுவதும் ஹீரோ கஷ்டப்படும் காட்சிகளை மட்டுமே வைத்துள்ளார். இந்தப் படத்தை எடுப்பதற்காக 15 வருடங்களுக்கு முன்பே அவர்கள் ஓகே செய்து விட்டார்கள்.

-விளம்பரம்-

ஆனால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டை கேரளா சினிமாவில் அப்போது யாரும் முன் வரவில்லை. தற்போது மலையாள சினிமா தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. ஆகையால் இந்த திரைப்படத்தை கொரோனாவுக்கு முன்பாக தொடங்கினார்கள் ஆனால் அது இப்போதுதான் முடிவடைந்தது. சமீபக்காலமாகவே மலையாள படம் ஒரு படி மேலே சென்று கொண்டு இருந்தது. குறிப்பாக மஞ்சுமேல் பாய்ஸ் மற்றும் பிரமேலு போன்ற திரைப்படங்களால் மலையாள சினிமா ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

மஞ்சுமால் பாய்ஸ் திரைப்படம் வெளியான பின்பு நாங்கள் அதை உடனடியாக பார்க்கவில்லை. அதன் பின்பு அனைவரும் கால் செய்து படத்தை Review செய்ய வேண்டும் என்னிடம் கூறினார்கள். தமிழ் சினிமாவில் எப்போது தான் நல்ல படங்கள் வருகின்றது இந்தத் திரைப்படம் ஆஸ்காருக்கு தகுதியான திரைப்படம் தான் இந்தத் திரைப்படம் அனைவருக்கும் வானதி திரைப்படம் கிடையாது வித்தியாசமான திரைப்படங்களைத் தேடிப் பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டும் தான் இந்த திரைப்படம் என்று அவர் கூறியிருந்தார்.

மலையாள சினிமாவில் இந்த வருடம் வெளியான பிரேமலு திரைப்படம் 100 கோடி வசூலும், பிரமயுகம் திரைப்படம் 80 கோடி வசூலும் ஈட்டிய நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 200 கோடி வசூல் ஈட்டியுள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வசூலை ஆடு ஜீவிதம் மிஞ்சுமா? என்கிற கேள்விதான் தற்போது மலையாள திரையுலகில் பேச்சு பொருளாக மாறியுள்ளது.

Advertisement