குழந்த, உன் சாதனைய எந்த நடிகராலும் முறியடிக்க முடியாது,இந்த பிஸ்கெட் – அசோக் செல்வனுக்கு ப்ளூ சட்டை பதிலடி.

0
428
ashok
- Advertisement -

தன்னுடைய படங்கள் குறித்து விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு மறைமுகமாக அசோக் செல்வன் பதிலடி கொடுத்த நிலையில் தற்போது அவரது பதிவுக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்துள்ளார். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.

- Advertisement -

அதிலும் அஜித்தின் வலிமை படத்தை குறித்து இவர் தாறுமாறாக பேசி இருந்ததால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொந்தளித்து ப்ளூ சட்டை மாறனை திட்டி இருந்தார்கள். இதற்கு இடையில் இவர் ஒரு படம் ஒன்று எடுத்து இருந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக தான் பணிபுரிந்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இப்படி ஒரு நிலையில் இவர் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

பல சர்ச்சைகளுக்கு பின் வெளியான இந்த படம் சரியாக ஓடவில்லை. இதில் அவரே நடித்திருந்தார். இதனால் இந்த படம் வந்த வேகத்திலேயே காணாமல் போனது என்று சொல்லலாம். ஆனாலும், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தனது விமர்சன வேலையை செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்திலும் அடிக்கடி பிற படங்களை கலாய்த்து பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் இந்த ஆண்டு அதிகம் Flop கொடுத்த நடிகர்களின் படங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.இப்படி ஒரு நிலையில் இந்த ஆண்டு அசோக் செல்வன் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என்று இந்த ஆண்டு அதிகம் Flop கொடுத்த நடிகர் என்று ப்ளூ சட்டை பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் “குரைக்கும் நாய்களை கண்டு கொள்ளாமல் முன்னோக்கி செல்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

அசோக் செல்வனின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் அசோக் செல்வன் ப்ளூ சட்டையை தான் சொல்கிறார் என்று கமன்ட் செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அசோக் செல்வனின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள ப்ளூ சட்டை மாறன் ‘ட்விட்டர் மூலம் குலைப்பதால் ஒரு பிரயோஜனம் இல்ல குழந்த. தயாரிப்பாளர் பணத்தை வீணடிக்க வேண்டாம். ஒரே ஆண்டில் 5 flop என்பது எல்லாம் பெரிய சாதனை. வருங்காலத்தில் எந்த ஒரு நடிகரும் அதை முறியடிக்க முடியாது. உன் திறமையை வளர்க்க முயற்சி செய். என்னிக்கையை விட தரம் தான் முக்கியம். பிஸ்கெட்ட என்ஜாய் பண்ணு’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement