‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ – 2006ல் வந்த ஹாலிவுட் பட ட்ரைலரை பகிர்ந்து தன் பங்கிற்கு துணிவு படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை.

0
516
blue
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்தஆண்டு வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை விமர்சனம் செய்துஇருந்தார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருந்தார்இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துஇருந்தனர். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து இருந்தார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து இருந்தார்

- Advertisement -

ப்ளூ சட்டை வலிமை விமர்சனம் :

இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம்பெற்றது. மேலும், இந்த படம் ரசிகர்களின் 3 வருட காத்திருப்பை ஓரளவிற்கு பூர்த்தி செய்து இருந்தாலும் ஜென்ரல் ஆடியன்ஸை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கும் விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் அஜித்தை உருவக்கேலி செய்து இருந்தார். இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்துவந்தனர்.

அஜித்தை தொடர் கேலி :

அதிலும் இவர் இந்த படத்தில் அஜித் ஷேவிங் எல்லாம் செய்துவிட்டு பஜன் லால் சேட் போல இருக்கிறார் என்றும், மூஞ்சில் தொப்பையை வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடவே கஷ்டப்படுகிறார் என்றும் விமர்சனம் செய்து இருந்தார். இதை தொடர்ந்து இவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் ட்விட்டரில் பனி போர் ஏற்பட இவர் அஜித்தை தொடர்ந்து கேலி செய்து வருகிறார். அந்த வகையில் துணிவு படத்தையும் அடிக்கடி கேலி செய்து வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாருடன் கைகோர்த்து தற்போது உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் பட்டிமன்ற பேச்சாளர்  மோகன சுந்தரம் , பிரேம்,ஜான் கோக்கன்,வீரா,சி.எம்.சுந்தர் ,அஜய் – ராமச்சந்திரன்,சமுத்திரக்கனி என்று பலரின் பெயர்களை அறிவித்து இருந்தது.

இந்த படம் வங்கிக் கொள்ளை கதையை தழுவி எடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த ட்ரைலரை பார்த்த பலரும் பீஸ்ட் திரைப்படம் போல இருக்கிறது என்று கேலி செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தன் பங்கிற்கு இந்த படத்தை கலாய்த்து இருக்கும் ப்ளூ சட்டை இந்த படம் ஹாலிவுட்த்தின் காபி போல இருக்கிறது என்று 2006 ஆம் ஆண்டு வெளியான ‘Inside man’ படத்தின் ட்ரைலரை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement