காசு கொடுத்து வீடு கட்ட விடமாற்றாங்க – கொடைக்கானல் விவகாரம் குறித்து பாபி சிம்ஹா விளக்கம்.

0
1311
bobby
- Advertisement -

கடந்த சில மாதங்களாகவே கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதி இடம் குறித்த சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹா தனது சொந்தமான இடத்தில் வீடு கட்டி வந்திருக்கிறார். இங்கு வீடு கட்டும் பணிகளை கொடைக்கானலை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஜமீர், காசிம் முகமது ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதற்காக அவர்களுக்காக அவர் பெரிய தொகையும் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த ஒப்பந்ததாரர்கள் வீட்டை குறைந்த பணத்தில் கட்டி வந்திருக்கிறார்கள். இதனை எடுத்து சமீபத்தில் கொடைக்கானல் சென்ற பாபி சிம்ஹா தன்னுடைய வீட்டை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது தான் இவருக்கு தரம் குறைவான கட்டிடம் கட்டுவது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்டிருக்கிறார். அப்போது இரு தரப்புக்கும் மத்தியில் வாக்குவதும் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதனால் ஒப்பந்ததாரர்கள் வீட்டு பணிகளை அப்படி பாதியிலேயே போட்டுவிட்டு இருக்கிறார்கள். மேலும், இந்த ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக மகேந்திரன் என்பவர் இருக்கிறார். இவர் சமூக ஆர்வலர் என்று சொல்லிக்கொண்டு பாபி சிம்ஹாவிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்திருக்கிறார். இதனை அடுத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த மகேந்திரன் மீது கொடைக்கானல் காவல் நிலையம் மற்றும் கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் பாபி சிம்ஹா புகார் அளித்திருக்கிறார்.

பாபி சிம்ஹா கொடுத்த புகார்:

மேலும், இந்த புகாரை விசாரித்த நீதிபதி ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒப்பந்ததாரர்கள் ஜமீர். காசி முகமது மற்றும் இவர்களுக்கு ஆதரவாக இருந்த உசேன், மகேந்திரன் ஆகியோர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக உசேன் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் பாபி சிம்ஹா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

-விளம்பரம்-

பாபி சிம்ஹா கூறியது:

நான் இதுவரை அவருக்கு ஒரு கோடியே 70 லட்சம் கொடுத்து இருக்கின்றேன். அதில் மூன்று லட்சம் தண்ணி தொட்டிக்காகவும் டீசல் கொடைக்கானலில் வழக்கம் போல் நடைபெறும் மின்சார தட்டுப்பாடுகளுக்கு ஜெனரேட்டர் வைத்துள்ளேன் என்று என்னிடம் கூறினார். அதற்கான பில்களை கேட்டால் அவர் தர மறுக்கிறார். என்னுடைய பெற்றோர்கள் மிகவும் வயதானவர்கள் அவர்கள் படி மேலே சிரமப்படுவார்கள் என்று வீட்டிற்கு லிப்ட் செலவிற்கு அவருக்கு 40 லட்சம் தந்தேன் வேண்டும்.

10 லட்சத்தில் கேம்ப் பயர் என்று கூறினார் அந்த கேம்ப் பயர் நீங்களே பார்த்தீர்கள். நானும் அதன் பிறகு பணத்தின் மீது கவனம் செலுத்தவில்லை முடிவில் அதற்கு வீடு கட்டிக் கொடுத்தால் போதும் என்று நிலைக்கு வந்து விட்டேன். நான் வீடு கட்டி விட்டு நானும் எப்படி பிரச்சனை செய்வேன். நான் பணம் கொடுத்து வீடு கட்ட ஆசைப்பட்டேன் சிலர் அதை தடுக்க முயற்சி செய்து வருகிறார்கள். என் மீது வழக்கு தொடுக்கப்பட்டதற்கு நான் எதுவும் கடிதத்தை பெறவில்லை . என்றும் நடிகர் பாபி சம்ஹா தெரிவித்துள்ளார்.

Advertisement