கம் பேக் கொடுத்தாரா ஜெயம் ரவி,எப்படி இருக்கிறது ‘இறைவன்’ – முழு விமர்சனம் இதோ

0
1577
Iraivan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இறைவன். இந்த படத்தை இயக்குனர் ஐ அகமது இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, ராகுல் போஸ், நரேன், ஆஷீஸ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, வினோத் கிஷன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சைக்கோ தில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம் :

படத்தில் மனிதன் மிகவும் ஆபத்தான விலங்கு என்ற வசனத்துடன் தான் தொடர்கிறது. ஆரம்பத்தின் முதலில் மொத்த கதையையும் சொல்லி விடுகிறார்கள். போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி இருக்கிறார். இவர் தப்பு செய்தவர்களை கடவுள் \தண்டிப்பார் என்ற கோட்பாட்டை நம்புவதில்லை. தவறு செய்தவர்களை தண்டிக்கும் கடவுள் தான் என்று நினைத்துக் கொண்டு என்கவுண்டர் செய்கிறார். இன்னொரு பக்கம் நான் தான் கடவுள் என்று நினைத்துக் கொண்டு கொலைகள் செய்கிறார் ராகுல் போஸ்.

- Advertisement -

இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் படத்தின் கதை. படத்தில் சென்னையில் அடுத்தடுத்து இளம் பெண்களை கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்கிறார்கள். அந்த பெண்களுடைய கண்களை பறித்து, கால்களை அறுத்து யோசிக்க முடியாத அளவிற்கு கொடூரமாக கொலை செய்கிறார்கள். இதையெல்லாம் பிரம்மா என்ற சைக்கோ கொலைகாரன் தான் செய்கிறார் என்று காவல்துறைக்கு தகவல் தெரிகிறது. இதனை அடுத்து அவரை பிடிக்க காவல்துறை அதிகாரியான ஜெயம் ரவி, அவருடைய நண்பர் ஆண்ட்ரூ குழு முயற்சிக்கிறார்கள்.

பின் அந்த சைக்கோ கொலைகாரன் பிரம்மாவை அர்ஜுன் நண்பர் ஆண்ட்ரூ பிடிக்கிறார். அப்போது ஜெயம் ரவி நண்பர் இறந்து விடுகிறார். இதனால் மன அழுத்தத்திற்கு சென்ற ஜெயம் ரவி போலீஸ் வேலையில் இருந்து ஒதுங்கினார். ஒரு கட்டத்தில் பிரம்மா போலீசிலிருந்து தப்பித்து விடுகிறார். ஆனால், இந்த முறை அவர் முன்பை இருந்ததைவிட அதிக கொடூரமாக கொலை செய்கிறார். குறிப்பாக ஜெயம் ரவியை சுற்றி இருப்பவர்களை தான் இவர் அதிகம் கொலை செய்கிறார்.

-விளம்பரம்-

என்ன செய்வது என்று புரியாமல் போலீஸ் துறையே கதி கலங்கி நிற்கிறது. இறுதியாக சைக்கோ கொலைகாரன் பிரம்மா சிக்கினாரா? அவருடைய நோக்கம் என்ன? ஜெயம் ரவி மீண்டும் போலீசில் இணைந்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படத்தில் அர்ஜுனாக ஜெயம் ரவி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் ஒன் மேன் ஆர்மியாக மொத்த படத்தையும் தாங்கி சென்று இருக்கிறார் என்று சொல்லலாம். ஆக்ரோஷம், இயலாமை, அன்பு, வெறி, எமோஷன் என அனைத்தையும் சிறப்பாக காண்பித்து இருக்கிறார்.

இவரை அடுத்து வில்லனாக வரும் ராகுல் போஸ் நடிப்பும் சிறப்பு மிரட்டி இருக்கிறார். பார்வையிலேயே அனைவரையும் மிரட்டுகிறார். உண்மையான சைக்கோ எப்படி இருப்பார் என்பதை கண் முன்னே ராகுல் போஸ் காண்பித்து இருக்கிறார். இவர்களை அடுத்து வரும் நயன்தாரா, சார்லி நரேன், அழகம்பெருமாள், பகவதி பெருமாள் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு இயக்குனர் கதையை நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார்.

வழக்கமான சைக்கோ த்ரில்லர் கதையாக இருந்தாலும் அதை கொடுத்திருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரசியத்துடன் இயக்குனர் கொடுத்திருக்கிறார். குறிப்பாக இடைவெளிக்கு பிறகு வரும் டுஸ்டும், திரில்லும் பயங்கரமாக இருக்கிறது. மேலும், படத்திற்கு மற்றொரு பக்க பலம் என்றால் யுவன் சங்கர் ராஜாவின் இசை தான். இசையாலே படத்தை மிரள வைத்திருக்கிறார். ஆனால், படத்தின் ஆரம்பத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். ஆக மொத்தம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பயங்கரமான சைக்கோ திரில்லர் கதையை இயக்குனர் காண்பித்து இருக்கிறார்

நிறை:

ஜெயம் ரவி, ராகுல் போஸ் நடிப்பு சிறப்பு

இயக்குனர் கதைகளம் அருமை

யுவன் சங்கர் ராஜா இசை தூள் கிளப்புகிறது

சைக்கோ திரில்லர் கதை

இடைவெளிக்கு பின் டுவிஸ்ட் கிளைமாக்ஸ் விறுவிறுப்பாக சென்றிருக்கிறது

குறை :

முதல் ஆரம்பத்தில் நீளத்தை குறைத்திருக்கலாம்

சில லாஜிக் குறைபாடுகள் தான்

வழக்கம்போல் பெண்கள் தான் சைக்கோ கில்லருக்கு பலி

மொத்தத்தில் இறைவன்- உச்சம்

Advertisement