கொடைக்கானல் சொகுசு பங்களா சர்ச்சை : குடிச்சிட்டு எப்படி பேசி இருக்கார் பாருங்க – பாபி சிம்ஹா ஆடியோவை வெளியிட்ட நண்பர்

0
2040
bobby
- Advertisement -

செல்வாக்கை பயன்படுத்தி தான் பாபி சிம்ஹா இப்படி எல்லாம் செய்கிறார் என்று உசேன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் ஆகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதி இடம் குறித்த சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹா தனது சொந்தமான இடத்தில் வீடு கட்டி வந்திருக்கிறார். இங்கு வீடு கட்டும் பணிகளை கொடைக்கானலை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஜமீர், காசிம் முகமது ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதனால் ஒப்பந்ததாரர்கள் வீட்டு பணிகளை அப்படி பாதியிலேயே போட்டுவிட்டு இருக்கிறார்கள். மேலும், இந்த ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக மகேந்திரன் என்பவர் இருக்கிறார். இவர் சமூக ஆர்வலர் என்று சொல்லிக்கொண்டு பாபி சிம்ஹாவிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்திருக்கிறார். இதனை அடுத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த மகேந்திரன் மீது கொடைக்கானல் காவல் நிலையம் மற்றும் கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் பாபி சிம்ஹா புகார் அளித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும், இந்த புகாரை விசாரித்த நீதிபதி ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒப்பந்ததாரர்கள் ஜமீர். காசி முகமது மற்றும் இவர்களுக்கு ஆதரவாக இருந்த உசேன், மகேந்திரன் ஆகியோர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக உசேன் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் அவர், நான் சென்னை மற்றும் கொடைக்கானலில் கடந்த 30 வருடமாக ரிசார்ட் நடத்தி வருகிறேன். என்னுடைய நண்பரும் நடிகருமான பாபி சிம்ஹா என் மீது பொய்யான புகார் கூறியிருக்கிறார். இதை அவர் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி என் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று வெளியிட்டு இருக்கிறார். மேலும், குடித்துவிட்டு பாபி சிம்ஹா தன்னை மிரட்டியதாக ஆடியோ ஒன்றையும் போட்டு காட்டியுள்ளார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் பாபி சிம்ஹா அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்று மாடி கட்டிடம் கட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள். இது தொடர்பாக கூட வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் அதே பகுதியில் பாபி சிம்ஹா கட்டி வரும் கட்டிடம் குறித்த சர்ச்சை தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது.

Advertisement